ரஷிய தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ.995டாக்டர் ரெட்டி ஆய்வகம் அறிவிப்பு

கொரோனாவுக்கு எதிராக ரஷியா தயாரித்த ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த தடுப்பூசியை டாக்டர் ரெட்டி ஆய்வகம் இறக்குமதி செய்து இந்தியாவில் வினியோகிக்கிறது.

அந்த வகையில் 1½ லட்சம் டோஸ்கள் அடங்கிய இந்த தடுப்பூசியின் முதல் தொகுப்பு கடந்த 1-ந் தேதி இந்தியா வந்து சேர்ந்தது. இதற்கு மத்திய மருந்துகள் ஆய்வகத்தின் ஒழுங்குமுறை அனுமதியும் நேற்று முன்தினம் கிடைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த தடுப்பூசி வினியோகம் மற்றும் விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது. இந்த தடுப்பூசிக்கு சந்தை விலையாக ரூ.948 மற்றும் 5 சதவீத ஜி.எஸ்.டி.யும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் ரூ.995 ரூபாய்க்கு இந்த தடுப்பூசி விற்பனை செய்யப்படும் என டாக்டர் ரெட்டி ஆய்வகம் அறிவித்து உள்ளது.

இந்த தடுப்பூசியின் அடுத்தடுத்த தொகுதிகள் வருகிற மாதங்களில் வந்து விடும் எனவும், அதேநேரம் இந்தியாவிலும்6 நிறுவனங்கள் இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்து வருவதாகவும் இந்த நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த தடுப்பூசியின் உள்ளூர் தயாரிப்புகள் கிடைத்தவுடன் விலை குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment