உயர் போலீஸ் அதிகாரிகள் 15 பேர் மாற்றம்

தமிழகத்தில் 15 உயர் போலீஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களில் 13 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தவர்கள்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

1.பிரதீப் வி பிலிப்- டி.ஜி.பி.யான இவர், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது போலீஸ் அகாடமி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2.ஜெயந்த்முரளி- கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யான இவர், காத்திருப்போர் பட்டியலில் இருந்தார். ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி.யாக பணி அமர்த்தப்பட்டுள்ளார்.

3.மகேஷ்குமார் அகர்வால்- சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த இவர், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். மாநில குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி ஏற்பார்.

4.ஆபாஷ்குமார்- தென்மண்டல கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றிய இவர், மாநில பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக பொறுப்பு ஏற்பார்.

5.எச்.எம்.ஜெயராம்- காத்திருப்போர் பட்டியலில் இருந்த இவர், சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஐ.ஜி.யாக பணி அமர்த்தப்பட்டார்.

6.ஆர்.தினகரன்- காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த இவர், மாநில பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக பதவி ஏற்பார்.

7.லோகநாதன்- காத்திருப்போர் பட்டியலில் இருந்த இவர், ஆயுதப்படை ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.

8.ராஜேந்திரன்- மாநில உளவுப்பிரிவு (உள்நாட்டு பாதுகாப்பு) டி.ஐ.ஜி.யாக இருந்த இவர், தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார்.

9.மகேஷ்வரன்- சூப்பிரண்டான இவர், காத்திருப்போர் பட்டியலில் இருந்தார். மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.

10.மூர்த்தி- சூப்பிரண்டான இவர், காத்திருப்போர் பட்டியலில் இருந்தார். சேலம் நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

11.செந்தில்- சூப்பிரண்டான இவர், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். தூத்துக்குடி பேரூரணி போலீஸ் பயிற்சிப் பள்ளி முதல்வராக மாற்றப்பட்டார்.

12.அருள்அரசு- சூப்பிரண்டான இவர், காத்திருப்போர் பட்டியலில் இருந்தார். சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் சட்டம்-ஒழுங்கு உதவி ஐ.ஜி.யாக பதவி ஏற்பார்.

13.பி.சரவணன்- சூப்பிரண்டான இவர், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். டி.ஜி.பி. அலுவலகத்தில் நிர்வாகப்பிரிவு உதவி ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

14.ராஜா- சூப்பிரண்டான இவர், காத்திருப்போர் பட்டியலில் இருந்தார். வணிக குற்றப்புலனாய்வு பிரிவு சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.

15.சுரேஷ்குமார்- சூப்பிரண்டான இவர், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு (2) சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment