சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

நாடு முழுவதும் 10,556 பேர் தேர்ச்சி சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 750 பேர் உட்பட மொத்தம் 10,556 பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட உயர் பதவிகளுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டு தோறும் குடிமைப்பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக முதல் நிலை, முதன்மை, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்படும். அதன்படி, நடப்பு ஆண்டு 796 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு, கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் கடந்த அக். 4-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை நாடு முழுவதும் 2,569 மையங்களில் 6.5 லட்சம் பட்டதாரிகள் எழுதினர். 

தமிழகத்தில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தேர்வெழுதினர். இந்நிலையில் முதல்நிலைத் தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி நேற்று முன்தினம் இரவு வெளி யிட்டது. தேர்வர்கள் தங்கள் முடிவுகளை upsconline.nic. in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இந்த தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 750 பேர் உட்பட மொத்தம் 10,556 பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஜன.8-ல் முதன்மை தேர்வு இதையடுத்து தேர்ச்சி பெற்றவர் களுக்கு ஜனவரி 8-ல் முதன்மைத் தேர்வு நடக்க உள்ளது. 

இதற்கு அக்.28 முதல் நவம்பர் 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். டிசம்பர் முதல் வாரத்தில் - ஹால்டிக்கெட் வெளியிடப்படும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறியலாம் என்றுயுபிஎஸ்சி தெரிவித்துள்ளது. வழக்கமாக முதல்நிலைத் தேர்வு நடந்து, குறைந்தது ஒரு மாதத்துக்கு பிறகே தேர்வு முடிவுகள் வெளியாகும். ஆனால், சிவில் சர்வீஸ் தேர்வுகள் வரலாற்றிலேயே முதல்முறையாக 19 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment