சிறுபான்மையின மாணவ, மாணவிகளின் உதவித்தொகை

சிறுபான்மையின மாணவ, மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் ஒன்று முதல் ஆராய்ச்சி படிப்புவரை படிக்கும் சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி, தொழில் நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலானகல்வி உதவித்தொகை பெறவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இதற்கு www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இக்கல்வி உதவித்தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும். 

இத்திட்டம் தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் http//www.minorityaffairs.gov.in/ schemes/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment