மாவட்ட ஆட்சியர்கள், பதிவுத் துறை தலைவர் உட்பட 23 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

திருவள்ளூர், காஞ்சிபுரம், கரூர், மதுரை, குமரி மாவட்ட ஆட்சி யர்கள், பதிவுத் துறை தலைவர் உட்பட 23 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய செயலர் பி.கணேசன், நகர ஊரமைப்பு இயக்குநராகவும், சென்னை கலால் துறை துணை ஆணையர் எம்.எஸ்.சங்கீதா, உயர்கல்வித் துறை துணை செயலராகவும், சென்னை வெளிவட்ட சாலை சிறப்பு நில எடுப்பு அதிகாரி எம்.அருணா, வேளாண் துறை கூடுதல் இயக்குநராகவும், காஞ்சி புரம் மாவட்ட ஆட்சியர் பி.பொன் னையா, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகவும், அப்பதவியில் இருந்த மகேஷ்வரி ரவிக்குமார் காஞ்சிபுரம் ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

நிதித் துறை இணை செயலர் எம்.அரவிந்த், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராகவும், பெரம்ப லூர் மாவட்ட ஆட்சியர் வி.சாந்தா, திருவாரூர் ஆட்சியராகவும், பட்டு வளர்ச்சி இயக்குநர் பி.ஸ்ரீவெங்கட பிரியா பெரம்பலூர் ஆட்சியரா கவும், கரூர் ஆட்சியர் டி.அன்ப ழகன், மதுரை ஆட்சியராகவும், அங்கு பணியாற்றிய டி.ஜி.வினய், பட்டு வளர்ச்சி இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தருமபுரி ஆட்சியர் எஸ்.மலர் விழி, கரூர் ஆட்சியராகவும், தமிழ் நாடு ஊரக மறுமலர்ச்சி திட்ட தலைமை செயல் அதிகாரி எஸ்.பி. கார்த்திகா, தருமபுரி ஆட்சியரா கவும், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் அஜய் யாதவ், சுகா தாரத் துறை இணை செயலரா கவும், அப்பதவியில் இருந்த ஏ.சிவஞானம் தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநராகவும், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் டி.ஆனந்த், வேளாண் துறை இணை செயலரா கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

தமிழ்நாடு நகர்ப்புற நிதி, கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் (டுபிட்கோ ) தலைவர் அபூர்வ வர்மா, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலராகவும், தமிழ்நாடு குடிநீர், கழிவுநீர் வாரிய இணை மேலாண் இயக்குநர் எல். நிர்மல் ராஜ், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராகவும், செய்தித் துறை இயக்குநர் பி.சங்கர், பதிவுத் துறை தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மறு உத்தரவு வரும் வரை பி.சங்கர் செய்தித் துறை இயக்குநர் மற்றும் அரசு கேபிள் டிவி கழக மேலாண் இயக்குநர் பதவியை கூடுதலாக கவனிப்பார். 

சென்னை அரசுவிருந்தினர்மாளிகையின் இணை மரபு அதிகாரி டி.கிறிஸ்துராஜ், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணைத் தலைவரா கவும், வன்னியகுல சத்ரிய பொது அறக்கட்டளை உறுப்பினர் செயலர் ஆர்.பிருந்தாதேவி, தமிழ் நாடுமாக்னசைட் நிறுவன மேலாண் இயக்குநராகவும், கன்னியாகுமரி ஆட்சியர் பிரசாந்த் எம்.வடநரே, தமிழ்நாடு மின்உற்பத்தி, பகிர் மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு தொடரமைப்புக் கழக இணை மேலாண் இயக்குநராகவும், கோவை மாநகராட்சி முன்னாள் ஆணையர் ஸ்ரவன் குமார் ஜடாவத், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண் இயக்குநராகவும், பதிவுத் துறை தலைவராக இருந்த பி.ஜோதி நிர்மலாசாமி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநராகவும் நியமிக் கப்பட்டுள்ளனர். நகராட்சி நிர்வாக ஆணையர் கே.பாஸ்கரன் வசம் கூடுதல் பொறுப்பாக டுபிட்கோ தலைவர் பணி ஒப்படைக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment