TEACHERS ONLINE TRAINING : முதல்-அமைச்சர் ஒப்புதல் பெற்று ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் புத்தாக்க பயிற்சி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள டி.ஜி.புதூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விளாங்கோம்பை மலைக்கிராமத்தில் வனத்துறையின் மூலமாக பள்ளிக்கூடம் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் தொகையின் அடிப்படையை ஆய்வு செய்து விளாங்கோம்பை காட்டாற்று பள்ளத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் புத்தாக்க பயிற்சி அளிக்க முதல்-அமைச்சரின் ஒப்புதல் பெற்று, பின்னர் நடைமுறைப்படுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

No comments:

Post a Comment