RASIPALAN | உங்கள் ராசி பலன் 11-9-2020 முதல் 17-9-2020 வரை

மேஷம்

தன வரவு ஏற்படக்கூடிய சிறப்பான வாரம் இது. நினைத்த காரியங்களை சாதிக்கும் வகையில் உங்களுடைய முயற்சி இருக்கும். சிலருக்கு தடைப்பட்ட திருமணம் நிச்சயமாகும். குடும்பத்தில் புதிய திருப்பம் உண்டாகும். நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து காரியங்களிலும் நல்ல முடிவை எட்டுவீர்கள். இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை சூரிய பகவானுக்கு, நெய் தீபமேற்றி வழிபாடு செய்யுங்கள்.

ரிஷபம்

பணத்தட்டுப்பாடு காரணமாக மனதில் சஞ்சலம் உருவாகும். அரசாங்கத்தில் பெரிய பதவி வகிப்பவர்கள், சொந்தத் தொழில் செய்பவர்கள் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டிய தருணம் இது. உங்கள் முயற்சி கட்டாயம் கைகொடுக்கும், கணவன் - மனைவி உறவு கசப்புடன் இருந்தாலும், விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். இந்த வாரம் திங்கட்கிழமை சிவாலயம் சென்று ஈசனை வழிபடுங்கள்.

மிதுனம்

நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்தி தேடி வரும். பணப் புழக்கம் தாராளமாகும். இருந்தாலும் திட்டமிட்டுச் செயல்படுங்கள். பெண்களுக்கு எதிர்பாராத தனவரவு, பொருள் சேர்க்கை உண்டாகும். ஆன்மிகப் பெரியோர்களின் தரிசனம் கிடைக்கும். நெருங்கிய உறவினர்கள் கைகொடுத்து உதவுவார்கள். இந்த வாரம் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு வில்வமாலை சூட்டி வழிபடலாம்.

கடகம்

நீண்ட நாட்களாக இருந்து வந்த கடன் பிரச்சினைகள் விலகும். பிரிந்த நண்பர்கள் தேடி வருவார்கள். தங்களுடன் பணி செய்யும் சக ஊழியரால் மனக்கசப்பு உண்டாகும். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மாறக்கூடும். புத்திர தோஷம் உள்ள தம்பதிகளுக்கு அந்தக் குறை நீங்கும். புதிய வீடு கட்ட வாய்ப்பு உண்டு. இந்தவாரம் திங்கட்கிழமை விநாயகருக்கு அருகம்புல் சூட்டுங்கள்.

சிம்மம்

குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சச்சரவுகள் விலகும். குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை மேலோங்கும். பழைய கடன்கள் அடைபடும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக வராத விருந்தினர் தேடி வர வாய்ப்புண்டு. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சீட்டுப்பணம் மற்றும் வரவேண்டிய தொகை தள்ளிப்போகலாம். இந்த வாரம் சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

கன்னி

வீடு சம்பந்தமான பிரச்சினை தீருவதுடன், பரம்பரை சொத்தை அடையும் வாய்ப்பு கிடைக்கும். நெருப்பில் பணிபுரிபவர்கள் தங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும். மின்சார உபகரணங்களை ஜாக்கிரதையாக கையாளுங்கள். எந்த காரியத்தையும் செய்யும் முன்பாக, உங்களுக்கு நம்பிக்கையானவர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுங்கள். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றுங்கள்.

துலாம்

நீண்ட நாட்களாக நீடித்து வந்த பிரச்சினைகள் குறையக்கூடும். எதையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். நில சம்பந்தமான பிரச்சினைகள் தொடர்ந்தாலும், எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் நிச்சயம் அதில் வெற்றி அடைவீர்கள். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு மறைய, விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். இந்த வாரம் அம்மன் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

விருச்சிகம்

உங்களுக்கு எதிர்பாராத தன வரவுகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் சிறு மனக்கசப்பு உண்டாகலாம். மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன்- மனைவி இடையே கருத்து ஒற்றுமை உண்டாகும். ஆலய தரிசனம் செய்வது மிகவும் நல்லது. இந்த வாரம் புதன்கிழமை பெருமாள் ஆலயத்திற்குச் சென்று திருமாலை வழிபட்டு வாருங்கள்.

தனுசு

இதுவரை இருந்து வந்த குறைகள் நீங்க ஆரம்பிக்கும். பல வெற்றிகள் தேடி வர வாய்ப்புண்டு. உத்தியோகத்தில் இருக்கும் ஆண்களுக்கு, அன்னிய மொழி பேசுவோரால் தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம். பங்குச்சந்தையில் புதிய முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளால் ஒரு சிலருக்கு பெருமை வந்து சேரும். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள்.

மகரம்

சிறு சிறு தொல்லைகளை சந்திக்க நேரிடும் வாரம் இது. குடும்பத்தில் அனைவருமே உங்களுக்கு எதிராக உள்ளது போல ஒரு தோற்றம் உண்டாகும். இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் புரிவோர், தொழிலை விரிவுபடுத்துவதோ, தொழிலை மாற்றுவதோ செய்ய வேண்டாம். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். இந்த வாரம் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டுங்கள்.

கும்பம்

நன்மை தரக்கூடிய அம்சங்கள் அதிகம் காணப்படுவதால் இந்த வாரம் எடுத்த செயல்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். தொழிலாளர்கள் மற்றும் விவசாயம் செய்பவர்கள் புதிய முயற்சிகளால் வெற்றி அடைவார்கள். பணவரவும் தாராளமாக இருக்கும். வருவாய் ஓரளவு திருப்திகரமாக இருந்தாலும், புதிய புதிய செலவுகள் உண்டாகக்கூடும். இந்த வாரம் புதன்கிழமை அன்று பெருமாள் கோவிலுக்குச் சென்று விளக்கேற்றுங்கள்.

மீனம்

பணம் எதிர்பார்த்த அளவு இல்லாவிடினும் ஓரளவு கிடைக்கும். வெளிநாட்டுப் பயணங் கள் நல்லவிதமாக முடியும். சொந்தத் தொழில் புரிபவர்கள் படிப்படியாக முன்னேற ஆரம்பிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர் வருகையும், பிரிந்து சென்ற நண்பர்கள் தேடி வருவதும் எதிர்பாராமல் நிகழும். இந்த வாரம் செவ்வாய்க் கிழமை முருகப்பெருமானுக்கு நெய் தீபமேற்றி வழிபாடு செய்து வந்தால் நன்மைகள் ஏற்படும்.


No comments:

Post a Comment