PERIYAR AWARD 2020 : சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்.

கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஒவ்வொரு ஆண்டும், சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பிப்பதற்காக தமிழக அரசால் ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பெறுவோருக்கு ரூ.1 லட்சம் மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படுகிறது. 

இந்நிலையில் 2020-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 

எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு, மக்களின் வாழ்க்கைத்தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள், பெரியார் கொள்கையில் உள்ள ஈடுபாடு, சமூக சீர்திருத்த கொள்கை, கலை, இலக்கியம், சமூக பணிகள் ஆகியவற்றில் அர்ப்பணிப்பு உணர்வுடன் உள்ள விண்ணப்பதாரர்கள், தங்களது பெயர், சுயவிவரம் மற்றும் முழு முகவரியுடன் அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதிக்குள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment