NEP 2020 : புதிய கல்விக் கொள்கையின் மூலம் மதிப்பெண்களின் அழுத்தத்தில் இருந்து மாணவர்களை விடுவிப்பதே முக்கிய நோக்கம்

‘‘மதிப்பெண் சார்ந்த அழுத்தங்களில் இருந்து மாணவர்களை விடுவிப்பதே புதிய தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கம்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மத்திய கல்வித் துறை சார்பில் '21-ம் நூற்றாண்டில் பள்ளிக் கல்வி' என்ற தலைப்பில் காணொலிக் காட்சி வாயிலாக 2 நாள் மாநாடு நடைபெற் றது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டின் 2-வது நாளான நேற்று, பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது:

கடந்த 30 ஆண்டுகளில் உலகம் மகத்தான வளர்ச்சியை அடைந்திருக் கிறது. கல்வி, தொழில்நுட்பம், அறி வியல் உள்ளிட்ட பல துறைகள் நவீன மயமாகி உள்ளன. இந்த மாற்றங்கள் தான் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு மனித சமூகத்தை கொண்டு செல்லும். இதனைக் கருத்தில் கொண்டே, இந்தியாவில் மிக நீண்ட காலமாக இருந்து வந்த கல்விக் கொள்கைக்கு மாற்றாக புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது.

தற்போதைய கல்விக் கொள்கை யானது புத்தகக் கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதாக உள்ளது. ஆனால், புத்தக அறிவையும் தாண்டி மாணவர்களின் படைப்பாற்றலையும், ஆராய்ச்சி அறிவையும் மேம்படுத்தும் அம்சங்கள் புதிய கல்விக் கொள்கை யில் சேர்க்கப்பட்டுள்ளன. இதுவே இதன் முக்கிய சிறப்பம்சம்.

தற்போதைய சூழலில், மாணவர் கள் அவர்களின் மதிப்பெண் பட்டியலை கொண்டே மதிப்பீடு செய்யப்படு கிறார்கள். இது மிக தவறான புரித லாகும். பெற்றோர்கள் கூட, தங்கள் பிள்ளைகளிடம் 'என்ன கற்றுக் கொண் டாய்?' என்று கேட்பதற்கு பதிலாக, 'எவ்வளவு மதிப்பெண் எடுத்திருக் கிறாய்?' என்றே கேட்கின்றனர். நமது கல்விக் கொள்கை இதைத்தான் அவர் களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது.

மதிப்பெண் பட்டியலானது ஒரு மாணவனின் அறிவையும், திறமையை யும் எந்த வகையிலும் தீர்மானிக்காது. மாறாக, மாணவர்களுக்கு இது ஒருவித மன அழுத்தத்தையே கொடுக்கிறது. இந்த மதிப்பெண் சார்ந்த மன அழுத் தத்தில் இருந்து மாணவர்களை விடு விப்பதே புதிய கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கமாகும்.

5-ம் வகுப்பு வரை தாய் மொழிக் கல்வி’ என்ற அம்சத்தை பலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். தாய்மொழியை தவிர வேறு மொழி களில் பாடம் நடத்தக் கூடாதா என அவர்கள் கேட்கின்றனர். அது அப்படி அல்ல. ஆங்கிலம் உட்பட எந்த மொழி யில் வேண்டுமானாலும் பாடம் நடத்த லாம். ஆனால், குறிப்பிட்ட வகுப்பு வரை மாணவர்கள் கற்பது தாய்மொழியில் தான் இருக்க வேண்டும்.

ஒரு குழந்தை தனது வீட்டில் எந்த மொழியில் பேசுகிறார்களோ, அதைத்தான் எளிதில் புரிந்து கொள்ளும். அப்படி இருக்கும் போது, ஆங்கிலம் உட்பட வேறு மொழிகளில் பாடங்களை படித்து புரிந்து கொள்வது அந்தக் குழந்தைக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல், தாய்மொழியில் கற்கும் போதுதான் அந்த பாடத்தை குழந்தைகளால் முழுமையாக உள்வாங்க முடியும். இது அறிவியல்பூர்வமான உண்மை.

இன்று உலகளவில் கல்வியிலும், ஆராய்ச்சியிலும் தலைசிறந்த நாடு களாக விளங்கும் எஸ்டோனியா, அயர்லாந்து, பின்லாந்து, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகள் தொடக்கக் கல்வியை தாய்மொழியில் தான் கற்றுக் கொடுக்கின்றன. மொழி என்பது கற்றலுக்கு உதவும் ஒரு ஊடகம்தானே தவிர, அதுவே முழுமையான அறிவு கிடையாது என் பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

புதிய கல்விக் கொள்கையில் புதுமையான கற்பித்தல் முறைகள் அறி முகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், மாணவர்கள் தங்கள் புத்தக அறிவை மட்டுமின்றி தங்கள் சுற்றுப் புறம் சார்ந்த அறிவையும், புரிதலையும் மேம்படுத்திக் கொள்ள முடியும். இது பல புதிய ஆராய்ச்சிகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுக்கும்.

மொத்தத்தில், புதிய கல்விக் கொள் கையானது ஆற்றல்மிக்க இந்தியாவை உருவாக்கவும், சர்வதேச அரங்கில் இந்தியாவின் புகழை நிலைநாட்டவும் பெரிதும் உதவும்.

இவ்வாறு மோடி பேசினார்.பெற்றோர்கள் கூட, தங்கள் பிள்ளைகளிடம் 'என்ன கற்றுக் கொண்டாய்?' என்று கேட்பதற்கு பதிலாக, 'எவ்வளவு மதிப்பெண் எடுத்திருக்கிறாய்?' என்றே கேட்கின்றனர்.

No comments:

Post a Comment