NEET EXAM 2020 : 3,842 மையங்களில் 15.97 லட்சம் பேர் எழுதுகின்றனர்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள் ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க் கைக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் 3,842 மையங்களில் இன்று நடக்கிறது. தமிழகத்தில் 1.18 லட்சம் பேர் உட்பட நாடு முழுவதும் 15.97 லட்சம் பேர் எழுதுகின்றனர். கரோனா பரவல் காரணமாக அனைத்து மையங்களிலும் முழுமையான முன்னேற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்பு கள் மற்றும் கால்நடை மருத் துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப் படுகிறது. இத்தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்துகிறது. அதன்படி, 2020-21 கல்வி ஆண்டில் இள நிலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதி நடக்கும் என என்டிஏ அறிவித்தது.

கரோனா பரவல் காரண மாக நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என கோரி மாணவர்கள் மற்றும் பல் வேறு மாநில அரசுகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திட்டமிட்ட படி தேர்வை நடத்தலாம் என்றும் அனுமதி வழங்கியது.

இதையடுத்து, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதற்காக 154 நகரங்களில் 3,842 மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், நாமக்கல், சேலம், கோவை, கரூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல் வேலி, நாகர்கோவில் ஆகிய 14 நகரங்களில் 238 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள் ளன. சில நாட்களுக்கு முன்பு, வேலூரில் 2 தேர்வு மையங்கள் மாற்றப்பட்டது குறித்து மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரி விக்கப்பட்டுள்ளதாக என்டிஏ தெரிவித்துள்ளது.

தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜ ராத்தி, மராத்தி, ஒடியா, அஸாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் தேர்வு நடக்கிறது. அனைத்து நகரங் களிலும் ஆங்கிலம், இந்தி, உருது மொழிகளில் தேர்வு நடக்கும். ஆனால், மாநில மொழியில் எழுதுவோருக்கு அந்தந்த மாநிலத்தில் மட்டுமே தேர்வு நடக்கும்.

தமிழகத்தில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் உட்பட நாடு முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 மாணவ, மாணவிகள் நீட் தேர்வை எழுதுகின்றனர். தமிழகத்தில் இருந்து அரசுப் பள்ளி மாணவர்கள் 8 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ளனர்.

கரோனா பரவல் அச்சம் இருப்பதால் மாணவர்கள் போதிய இடைவெளியில் அமர்ந்து தேர்வு எழுதும் வகை யில் இருக்கைகள் அமைக்கப் பட்டுள்ளன. அனைத்து தேர்வு மையங்களும் கிருமிநாசினி யால் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளன.

மாணவ, மாணவிகளை தனித்தனி வரிசையில் போதிய இடைவெளியில் நிற்கவைத்து சோதனை செய்ய வேண்டும். உடலை தொட்டு சோதனை செய்யக் கூடாது. சற்று தொலைவில் இருந்தபடி, மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்த வேண்டும். காய்ச்சல் இருக்கிறதா என்று வெப்பமானியால் பரி சோதிக்க செய்ய வேண்டும். உடல் வெப்பம் 99.4 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் உள்ள மாணவர்களை தனி அறையில் தேர்வு எழுத வைக்க வேண்டும் என்று தேர்வு மைய பொறுப்பாளர் களுக்கு பல்வேறு அறிவுறுத் தல்களை என்டிஏ வழங்கி யுள்ளது.

நீட் தேர்வு எழுத வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம், கையுறை அணிந்து, ஹால் டிக்கெட்டில் குறிப் பிட்டுள்ள நேரத்துக்கு தேர்வு மையத்துக்கு வரவேண்டும். தேர்வர்கள் பகல் 1 மணி வரை மட்டுமே தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படுவர். 50 மிலி அளவு கொண்ட சானிடைசர், உட்புறம் தெளிவாக தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில் கொண்டுவரலாம்.

ஹால் டிக்கெட்டுடன், அரசு வழங்கியுள்ள புகைப் பட அடையாள அட்டை, விண்ணப்பிக்க பயன்படுத்திய அதே புகைப்படம் ஆகிய வற்றை கொண்டுவர வேண் டும். மாற்றுத் திறனாளிகள் அதற்கான சான்றிதழை எடுத்து வர வேண்டும்.

செல்போன் உட்பட எந்த ஒரு எலெக்ட்ரானிக் பொருட்களுக்கும் அனுமதி இல்லை. முழுக்கை சட்டை, ஷூ, சாக்ஸ், நகைகள் அணிந்து வரக் கூடாது. லோ ஹீல்ஸ் காலணி மட்டுமே அணிய வேண்டும் என்பன உட்பட மாணவர்களுக்கு பல் வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன.

நீட் தேர்வுக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தேர்வு எழுத இருந்த மாணவர் கள் தற்கொலை செய்து கொண்டதும் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தேர்வு மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் தலா 45 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் 4 பதில்களில் சரியானதை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்தம் 720 மதிப்பெண்கள். தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் (நெகட்டிவ்) குறைக்கப்படும். இம்மாத இறுதிக்குள் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட என்டிஏ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment