JEE 2020 RESULT : ஜேஇஇ முதல்நிலை தேர்வில் 24 பேர் 100 சதவீத மதிப்பெண் தமிழக மாணவர் 99.99% பெற்றார்

ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு என 2 கட்டங்களாக இது நடத்தப் படுகிறது.

அதன்படி, கடந்த ஏப்ரலில் நடக்க இருந்த ஜேஇஇ முதல் நிலை தேர்வு கரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டு கடந்த 1-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 660 மையங்களில் 6.35 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

இந்நிலையில் பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மட்டும் இணையதளத் தில் (jeemain.nta.nic.in) நேற்று முன்தினம் நள்ளிரவு வெளியிடப் பட்டது. இதில் 24 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். தெலங்கானா மாநிலத்தில் மட்டும் 8 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழகத்தில் கவுரவ் ஆர் கோச்சார் என்ற மாணவர் அதிகபட்சமாக 99.99 மதிப்பெண் எடுத்துள்ளார்.

பி.ஆர்க்., பி.பிளானிங். படிப்புக் கான ஜேஇஇ தேர்வு முடிவுகள் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

இதையடுத்து, தேர்ச்சி பட்டியலில் இடம்பெறும் முதல் 2.45 லட்சம் பேர் அடுத்தகட்டமாக வரும் 27-ம் தேதி நடக்க உள்ள ஜேஇஇ பிரதான தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள். அதில் வெற்றி பெறுபவர்கள் ஐஐடிகளில் இளநிலை பொறியியல் படிப்பு களில் சேர முடியும்.

No comments:

Post a Comment