IAS TRANSFER : கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநர் உட்பட 11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநர் உள்ளிட்ட 11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தலைமைச் செயலர் கே.சண்முகம் வெளியிட் டுள்ள அறிவிப்பில் கூறியிருப்ப தாவது:

நில நிர்வாக முன்னாள் கூடுதல் ஆணையர் பி.மகேஷ்வரி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலராகவும், உயர்கல்வித் துறை கூடுதல் செயலர் ஆர். லில்லி, நிலசீர்திருத்தத் துறை இயக்குநராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநர் டி.என்.வெங்கடேஷ், பொதுத் துறை சிறப்பு செயலராக வும், அப் பதவியில் இருந்த மைதிலி கே.ராஜேந்திரன் கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநராகவும் நிய மிக்கப்பட்டுள்ளனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அதிகாரி யான எஸ்.பி.அம்ரித், பொது (சட்டம்-ஒழுங்கு) துணை செயல ராகவும், அப் பதவியில் இருந்த நர்நவரே மனிஷ் ஷங்கரராவ் வணிகவரித் துறை அமலாக்கப் பிரிவு இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வணிகவரித் துறை அமலாக்கப் பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த ஜி.லட்சுமி பிரியா, அதே துறையில் நிர்வாகப் பிரிவு கூடு தல் ஆணையராக நியமிக்கப்பட் டுள்ளார்.

நிதித் துறை சிறப்பு செயலர் ஆர்.ஆனந்தகுமார், சர்க்கரைத் துறை ஆணையராக நியமிக்கப் பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் மேலாண் இயக்குநராகவும் செயல்படுவார்.

சர்க்கரைத் துறை ஆணைய ராக இருந்த ரீட்டா ஹரீஷ் தாக்கர், நிதித் துறை சிறப்பு செயல ராகவும், மாநில மனித உரிமை கள் ஆணைய முன்னாள் செயலர் வி.ஷோபா, தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத் தின் மேலாண் இயக்குநராக வும், தொழில் வழிகாட்டி பிரிவு இயக்குநராக இருந்த எஸ்.அனீஷ் சேகர், சிப்காட் செயல் இயக்குநராகவும் நியமிக்கப்பட் டுள்ளனர்.

இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment