CORONA VACCINATION : கரோனா தடுப்பு மருந்து சோதனையை சீரம் நிறுவனம் நிறுத்த உத்தரவு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் நடவடிக்கை

கரோனா தடுப்பு மருந்து பரிசோத னையை நிறுத்துமாறு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் (டிசிஜிஐ) சீரம் நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பித் துள்ளது.

கரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கும் ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் பிற ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய பரி சோதனைகளை நிறுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்தே இந்தியாவிலும் பரி சோதனைகளை நிறுத்த டிசிஜிஐ உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தெரிகிறது.

தடுப்பு மருந்து தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை இந்தியாவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) நிறுவனம் பெற்றுள்ளது. அவ்விதம் தயாரிக்கப்பட்ட மருந்தை சோதிக்கும் நடவடிக்கையில் முதல் கட்ட சோதனைகள் நிறைவடைந்து விட்டன. இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட சோதனைகளை மேற்கொள்ளவிருந்த நிலையில் சோதனையை தொடர வேண்டாம் என்று டிசிஜிஐ இயக்குநர் டாக்டர் வி.ஜி.சோமானி கையெழுத்திட்ட கடிதம் சீரம் நிறுவனத்துக்கு அனுப்பப் பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இந்த பரிசோதனை முடிவுகளில் திரட்டப்பட்ட புள்ளி விவரங் களையும், இந்தியாவில் நடத்தப்பட்ட பரி சோதனை முடிவுகளின் புள்ளி விவரங் களையும் முதலில் டிசிஜிஐ அலுவலகத் துக்கு அனுப்புமாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 9-ம் தேதியிட்ட கடிதத்தில் அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் தடுப்பு மருந்து சோதனையை ஐரோப்பிய நாடு களில் நிறுத்தியுள்ள விவரத்தை டிசிஜிஐ-க்கு தெரிவிக்காமல் இருந்ததற்கு விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனையின் போது ஏற்பட்ட மனித உயிரிழப்பு குறித்த விவரத்தை அளிக்குமாறும் அக்கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சீரம் நிறுவனம் புனேயை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகிறது. இது பிரிட்டன் மற்றும் ஸ்வீடனைச் சேர்ந்த அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்துடன் இணைந்து ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தற்போது தடுப்பு மருந்து பரிசோதனை களை நிறுத்தியுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வார தொடக்கத் தில் தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டவர் கள் சிலருக்கு விவரிக்க முடியாத உடல் சோர்வு ஏற்பட்டதாக அஸ்ட்ரா ஜெனிகா வெளியிட்ட புள்ளி விவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எஸ்ஐஐ தெரிவித் துள்ள பதில் கடிதத்தில், இந்தியாவில் மேற் கொள்ளப்பட்ட முதல் கட்ட பரிசோத னையில் எவ்வித பிரச்சினையும் ஏற்பட்ட தாக தகவல் இல்லை என தெரிவித்துள் ளது. முதல் டோஸ் அளித்த 7 நாளில் எந்த அசம்பாவித நிகழ்வும் பதிவாகவில்லை என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment