B.ED COLLEGE RECOGNITION CANCELLED : 71 பிஎட் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து ஆசிரியர் கல்வியியல் பல்கலை. அறிவிப்பு

தமிழகத்தில் 71 பிஎட் கல்லூரி களின் அங்கீகாரம் ரத்து செய்யப் பட்டுள்ளதாகவும், அதில் மாண வர்கள் சேர வேண்டாம் எனவும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை. தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வி யியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 718 பிஎட் கல்லூரிகள் செயல் பட்டு வருகின்றன. இவை ஆண்டு தோறும் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்திடம் (என்சிடிஇ) விண் ணப்பித்து அங்கீகாரத்தை புதுப் பித்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னரே பிஎட் கல்லூரி கள், மாணவர் சேர்க்கை பணி களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்.

அதன்படி நடப்பு ஆண்டு அங்கீகாரம் புதுப்பிக்கக் கோரி பல்வேறு பிஎட் கல்லூரிகள் விண் ணப்பித்தன. இந்த விண்ணப்பங் களை சரிபார்த்த என்சிடிஇ குழு போதிய கட்டமைப்பு வசதியற்ற 58 கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

அதன்பின் உரிய விளக்கம் அளிக்காததால் அந்த 58 பிஎட் கல் லூரிகளின் அங்கீகாரத்தையும் என்சிடிஇ ரத்து செய்தது. அதனு டன், பல்கலை. இணைப்பு அந் தஸ்து பெறாத 13 பிஎட் கல்லூரி களிலும் மாணவர் சேர்க்கை மேற் கொள்ள என்சிடிஇ தடைவிதித் துள்ளது.

இந்நிலையில் ஒட்டுமொத்த மாக அங்கீகாரம் ரத்து செய்யப் பட்ட 71 பிஎட் கல்லூரிகளின் பட் டியலை வெளியிட்டு, மாணவர் கள் அதில் சேர வேண்டாம் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை. தெரிவித்துள்ளது. இதுகுறித்து பல்கலை. பதிவாளர் வி.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘விதிகளுக்கு புறம் பாக உள்ள 71 கல்வியியல் கல் லூரிகளில் 2020-21-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை மேற் கொள்ள அனுமதி இல்லை.

அந்தக் கல்லூரிகள் பிஎட், எம்எட் உள்ளிட்ட கல்வியியல் படிப்புகளில் மாணவர் சேர்க் கையை மேற்கொள்ளக்கூடாது. மேலும், விதிகளை மீறி இந்தக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந் தால் அதற்கு பல்கலைக்கழகம் பொறுப்பேற்காது’’ என்று கூறப் பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 71 பிஎட் கல் லூரிகளின் பட்டியலை மாணவர் கள் அறிந்து கொள்ளும் வகை யில் ஆசிரியர் கல்வியியல் பல் கலைக்கழக இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று கல்வி யாளர்கள் கோரியுள்ளனர்.அங்கீகாரம் ரத்தாகியுள்ள 71 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளக்கூடாது. மேலும், விதிகளை மீறி இந்தக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்தால் அதற்கு பல்கலைக்கழகம் பொறுப்பேற்காது.

No comments:

Post a Comment