7 NEW ART COLLEGE 2020-21 : நடப்பு கல்வி ஆண்டில் 7 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடக்கம் கல்லூரிக்கல்வி இயக்குநரகம் அறிவிப்பு

தமிழகத்தில் 7 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளதாக கல்லூரிக்கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கல்லூரிக் கல்வி இயக்குநர் சி.பூர்ணசந்தி ரன், அனைத்து மண்டல அலுவல கங்களுக்கு அனுப்பியுள்ள சுற்ற றிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உயர்கல்வி படிப்ப வர்களின் எண்ணிக்கையை அதி கரிக்கும் விதமாக 7 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின்கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந் தார். அதன்படி கோவை, கரூர், நாகப்பட்டினம், அரியலூர், ராணிப் பேட்டை, விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் புதிதாக கல்லூரி கள் தொடங்கப்பட உள்ளன.

இதற்கான கட்டிடத்தை தேர்வு செய்து நடப்பு கல்வி ஆண்டு (2020-21) முதல் மாணவர் சேர்க்கை நடத்தி கல்லூரிகள் செயல்படுவதற் குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். புதிய கல் லூரிகளில் பிஏ தமிழ், பிஏ ஆங் கிலம், பி.காம், பிஎஸ்சி கணிதம், பிஎஸ்சி கணினி அறிவியல் ஆகிய 5 பாடப்பிரிவுகள் மட்டும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

இதற்கிடையே, புதிய கல்லூரி கள் தொடங்கியதற்கு பேராசிரியர் கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், தற்போது விண்ணப்பித்து இடம் கிடைக்காத மாணவர் களுக்கு புதிய கல்லூரிகளின் சேர்க் கையில் முன்னுரிமை அளிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment