முதன்மை கல்வி அதிகாரி பணியிடை நீக்கம்

புதுவை கல்வித்துறையில் முதன்மை கல்வி அதிகாரியாக ரங்கநாதன் (வயது 60) என்பவர் பணியாற்றி வந்தார். அவர் நேற்று பணி ஓய்வுபெற இருந்தார். இந்தநிலையில் திடீரென அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் உத்தரவு பிறப்பித்தார்.

பணியில் சேர்ந்தபோது தனது பிறந்த வருடத்தை மாற்றி குளறுபடி செய்திருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து ரங்கநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது துறைரீதியாக விசாரணை நடத்தப்பட்டு அதன்பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment