கல்வி தர குறியீட்டில் கேரள மாநிலம் முதலிடம்

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள கல்வி தர குறியீட்டில் கேரளா முதலிடம் பிடித்துள்ளது. உத்தர பிரதேசம் கடைசி இடத்தில் உள்ளது.

மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு 2016-17-ம் ஆண்டுக்கான கல்வி தர குறியீட்டை வெளி யிட்டுள்ளது. அதில் ஒட்டுமொத்த செயல்பாட்டில் பெரிய மாநிலங் கள் பட்டியலில் கேரளா முதலிடம் பிடித்துள்ளது. ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரா, குஜராத், அசாம், மகாராஷ்டிரா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தமிழகம் 8-வது இடத்தில் உள்ளது.

தமிழகத்தைத் தொடர்ந்து இமாச்சல பிரதேசம், உத்தரா கண்ட், ஹரியாணா, ஒடிசா, சத்தீஸ்கர், தெலங்கானா, மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், பிஹார், பஞ்சாப், காஷ்மீர் ஆகியவை உள்ளது உத்தர பிரதேசம் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

சிறிய மாநிலங்கள் பட்டியலில் மணிப்பூர் முதலிடத்தைப் பிடித் துள்ளது. திரிபுரா, கோவா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், மிசோரம், அருணாச்சல பிரதேசம் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. யூனியன் பிரதேசங்கள் பட்டியலில், சண்டிகர் முதலிடத் தில் உள்ளது. ஹவேலி, டெல்லி, புதுச்சேரி, டையூ-டாமன், அந்த மான் தீவுகள், லட்சத் தீவுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

கற்றல் அணுகலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கற்றல் முடிவுகளில் சிறந்த பலனை எட்டிய மாநிலங்களில் கர்நாடகா முதலிடத்தையும் சிறந்த உள்கட்டமைப்பில் ஹரியாணா முதலிடத்தையும் பெற்றுள்ளன.

No comments:

Post a Comment