மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி மாநகராட்சிப் பள்ளிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு குடிநீர் வாரியத்துக்கு ஆணையர் கடிதம்

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளி லும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு, மாணவ, மாணவியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கீழ் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 82 ஆயிரம் மாணவ, மாணவியர் பயின்று வரு கின்றனர். இப்பள்ளிகளின் குடிநீர் தேவையை இதுநாள் வரை நிலத் தடி நீர் மூலமாக சொந்த குடிநீர் ஆதாரத்தைக் கொண்டு பூர்த்தி செய்யப்பட்டு வந்தது. சில பள்ளி களில் மட்டும் சென்னை குடிநீர் வாரிய குடிநீர் பெறப்பட்டு, குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்த நிலையில், சென்னை முழுவதும் நிலத்தடிநீர் வறண்டது. அதனால் தற்போது மாநகராட்சி பள்ளிகளில் குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. மாணவ, மாணவியர், குடிநீர் குடிக்க முடியாமலும், கை கழுவ முடியா மலும், பாத்திரங்களை சுத்தம் செய்ய முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்கள் கழிவறை களையும் பயன்படுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது. அதன் காரணமாக மாணவ, மாணவி யர்களும், ஆசிரியர்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் குடிநீர் பஞ் சத்தை போக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, மாநக ராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மொத்தப் பள்ளிகளில் சுமார் 30 சதவீதம்தான் குடிநீர் பற்றாக் குறையால் பாதிக்கப்பட்டுள்ளன. சொந்த ஆதாரங்களான ஆழ்துளை கிணறுகளில் குறைந்த அளவே குடிநீர் கிடைக்கிறது. அதை வைத்து சமாளித்து வருகிறோம். அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள், உதவி கல்வி அலுவலர்கள், சம்பந்தப்பட்ட வார்டு குடிநீர் வாரிய பொறியாளர்களை தொடர்பு கொண்டால், காலத்தோடு குடிநீர் வழங்குவதில்லை. பேச்சுவார்த்தை அதனால், சென்னை குடிநீர்வாரி யத்துடன் உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வரு கிறது. மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் ஹரிஹரனிடம் பேசியுள்ளார். மாநகராட்சியில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை, அதில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் குடிநீர் வாரியத்துக்கு அனுப்பப் பட்டுள்ளன. நாளொன்றுக்கு குறைந்தது 4 லட்சம் லிட்டர் குடிநீராவது வழங்க வேண்டும் என்று ஆணையர் மூலமாக குடி நீர் வாரியத்துக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment