உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்


முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Saturday, May 19, 2018

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில், ஜூன் 11-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில், ஜூன் 11-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு | பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஜூன் 11-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர். ஜாக்டோ-ஜியோ ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் - உயர்மட்டக்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஆர்.தாஸ், சுரேஷ், சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஒருங்கிணைப்பாளர்கள் க.மீனாட்சிசுந்தரம், செ.முத்துசாமி, அ.மாயவன், மு.அன்பரசு, ஆர்.தாமோதரன், க.வெங்கடேசன், நிதி காப்பாளர் மோசஸ் மற்றும் செய்தி தொடர்பாளர் கு.தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- காலவரையற்ற உண்ணாவிரதம் * கடந்த 8-ந்தேதி ஜாக்டோ- ஜியோ நடத்திய கோட்டை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் மற்றும் ஆதரவளித்த அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்படுகிறது. * ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை தடுக்கும் வகையில் கோட்டையை சுற்றிலும் முள்வேலி அமைத்து தடுப்பு நடவடிக்கைகளை கையாண்டு மனித உரிமைகளை மீறிய தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. * கோட்டை முற்றுகை போராட்டத்தின்போது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யவேண்டும். * பணியாளர் பகுப்பாய்வு குழுவை ரத்து செய்யவேண்டும். * நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 11-ந்தேதி முதல் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்வது எனவும், அன்று முதல் மாவட்ட தலைநகரங்களில் தினந்தோறும் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. மேற்கண்டவாறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC - COMBINED ENGINEERING SERVICES EXAMINATION - DATE OF EXAM: 20.05.2018 FN & AN - DETAILS OF EXAMINATION


TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION Name of the Exam Combined Engineering Service Examination Name of the Posts Assistant Engineer (Civil), Water Resources Department,PWD Assistant Engineer (Civil), Buildings, PWD Assistant Engineer (Electrical) PWD Assistant Engineer (Civil) in Highways Department Assistant Engineer in Rural Devt. and Panchayat Raj Dept. Pay Scale Rs. 9300 – 34800 + Grade pay Rs.5100/- p.m. (Pre-revised) Notification No. 5/2018 Date of Notification 28.02.2018 Last date for submission of Application 26.03.2018 Number of Vacancies 330 No. of applications successfully Registered 68,308 No. of candidates admitted 67,795 No. of candidates Rejected 513 Qualifications B.E degree in Civil Engineering or Civil and Structural Engineering OR A pass in Sections A and B of the Institution Examinations under Civil Engineering branch, subject to the following further conditions namely:- I. Should furnish evidence of having undergone practical training in surveying for a period of not less than one year. OR II. Should have put in service for a period of not less than one year in Public Works Department as Overseer or Junior Engineer. OR III. Should hold the Upper Subordinate or L.C.E Diploma of the College of Engineering, Guindy OR L.C.E. Diploma awarded by the State Board of Technical Education and Training, Chennai A degree in Electrical Engineering or Electronics and Communication Engineering OR A pass in Sections A and B of the Institution Examination with Electrical Engineering as a subject. A degree in Civil Engineering OR A pass in Sections A and B of the Institution Examinations under Civil Engineering Branch. A degree in Civil Engineering OR A pass in Sections A and B of the Institution of Engineers (India) under Civil Engineering Branch, subject to the condition that he/she should furnish evidence of having undergone practical training in surveying for a period of not less than one year. Date of Examination 20.05.2018 FN & AN (SUNDAY) Subject Fore Noon - Paper-I(Subject) One of the following subjects in which the candidate has acquired his/her Degree qualification (Degree Standard – 200 questions) (i) Civil Engineering (code No.261) Or (ii) Electrical Engineering (code No. 259) Or (iii) Electronics and Communication Engineering (Code No.304) After Noon - Paper -II General Studies (100 questions) (Subject Code No-003) General Studies (Degree Standard)-75 Questions and Aptitude and Mental Ability(SSLC Standard) - 25 Questions. Mode of Examination OMR Mode – Objective Type Exam Centre 1.Chennai, 2.Madurai, 3.Coimbatore, 4.Tiruchirappalli, 5.Tirunelveli, 6.Salem, 7.Thanjavur, 8.Chidambaram, 9.Vellore, 10.Ramanathapuram, 11.Nagercoil, 12.Kancheepuram,13.Karaikudi, 14.Pudukkottai, 15.Udhagamandalam. 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, May 18, 2018

பள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக மாற்றம் - புதிய அரசாணை வெளியீடு - மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்...உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம்...


மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியும், உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம் செய்தும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 37,211 அரசு பள்ளிகள், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகள், 12,419 தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளை ஆய்வு செய்து கண்காணிக்க 32 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், 67 மாவட்ட கல்வி அதிகாரிகள், 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், 836 உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள், ஓர் ஆங்கிலோ-இந்தியன் பள்ளி ஆய்வாளர் உள்ளனர். நிர்வாக அமைப்பு மாற்றம் ஒவ்வொரு அதிகாரியும் தங்கள் அதி கார வரம்பில் வரும் அனைத்துப் பள்ளிகளையும் ஆய்வு செய்வது இயலாத காரியம். இதைக் கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக அமைப்பு மாற்றி அமைக்கப்படுவதுடன் கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரமும் அளிக்கப்படுகிறது. அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வருவாய் மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து வகை பள்ளிகளையும் அதாவது மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், அனைத்து தனியார் பள்ளிகளையும் ஆய்வு செய்வர். அதேபோல், மாவட்ட கல்வி அதிகாரிகளும் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட அனைத்து வகை பள்ளிகளையும் ஆய்வு செய்வர். மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பதவிகள் மாவட்ட கல்வி அதிகாரி பதவிக்கு இணை யான பதவியாக இருப்பதால் அந்தப் பதவிகள் மாவட்ட கல்வி அதிகாரி பதவியாக மாற்றப்படும். உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவி, வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம் செய்யப்படும். வட்டார கல்வி அதிகாரிகள் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மட்டுமின்றி தங்கள் அதிகார எல்லைக்கு உட்பட்ட அனைத்து வகை பள்ளிகளையும் (மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள்) ஆய்வு செய்து கண்காணிப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடப் புத்தகங்கள் விரைவில் விற்பனை தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் தகவல்


1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடப் புத்தகங்கள் விரைவில் விற்பனை தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் தகவல் | தமிழகத்தில் 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடப் புத்தகங்கள் இம்மாத இறுதியில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் டி.ஜெகந்நாதன் தெரி வித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: தமிழக பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம் படிப்படியாக மாற்றியமைக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக நடப்பு ஆண்டில் 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. புதிய பாடப்புத்தகங்கள் மே இறுதியில் விற்பனைக்கு கிடைக்கும். மற்ற வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் கழக விற்பனை மையங்களிலும் ஆன்லைன் மூலமும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகள் தங்களுக்கு தேவைப்படும் புத்தகங்களை ஆன்லைனில் பதிவு செய்து அதற்கான கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தி தங்களுக்கு அருகேயுள்ள பாடநூல் கழக மண்டல அலுவலகங்களில் மொத்தமாக பெற்றுக்கொள்ளலாம். மாணவர்கள் தனியாகவும் ஆன்லைனில் பதிவுசெய்து தங்களுக்குரிய பாடப் புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம். சிபிஎஸ்இ மாணவர்களுக்கும் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கான தமிழ்ப் புத்தகமே வழங்கப்படுகிறது. அதனால், சிபிஎஸ்இ மாணவர்களுக்கான தமிழ்ப் புத்தகங்களும் பாடநூல் கழகம் மூலமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு முப்பருவ முறை நடைமுறையில் இருப்பதால் ஓராண்டுக்கான தமிழ்ப் பாடங்கள் மூன்று தொகுப்பாக பிரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. சிபிஎஸ்இ-யில் முப்பருவ முறை கிடையாது என்பதால் அந்த மாணவர்களுக்கான தமிழ்ப் புத்தகங்கள் மட்டும் ஒரே தொகுப்பாக அச்சடித்து வழங்கப்படுகின்றன. சிபிஎஸ்இ-யில் 1 மற்றும் 9-ம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகளுக்கான தமிழ் பாடப்புத்தகங்கள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட புத்தக விற்பனையகங்களிலும் விற்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பாடப்புத்தகத்திலும் அதன் விலை அச்சடிக்கப்பட்டுள்ளது. அதைவிட அதிக விலைக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட விற்பனையகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஜெகந்நாதன் கூறினார். பாடநூல் கழக நூலகம் சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள ஈவிகே சம்பத் மாளிகை கட்டிடத்தின் தரைதளத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் சிறப்பு நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பாடநூல் கழகம், கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட்டு வந்தது. மொழி, இலக்கியம், அரசியல், வரலாறு, புவியியல், உளவியல், தத்துவம், தொழில்நுட்பம், மருத்துவம், விவசாயம் என பல்வேறு துறைகளில் தமிழில் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள் தற்போது அரிய புத்தகங்கள் ஆகிவிட்டன. அந்த அரிய புத்தகங்கள் மறுமதிப்பு செய்யப்பட்டு புதிதாக அமைக்கப்படும் நூலகத்தில் வாசகர்கள் படிப்பதற்காக வைக்கப்பட உள்ளன.  DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, May 15, 2018

PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.


PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு  தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

PLUS TWO PROVISIONAL MARK CERTIFICATE DOWNLOAD AND TC RELATED DETAILS | பள்ளித் தேர்வர்களுக்கு 21.05.2018 அன்று பிற்பகல் முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ் விநியோகம் செய்யப்படுகிறது.


PLUS TWO PROVISIONAL MARK CERTIFICATE DOWNLOAD AND TC RELATED DETAILS | மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2018 –தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் (Provisional Mark Certificate) விநியோகித்தல் | மார்ச் 2015–ஆம் ஆண்டு முதல் மேல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிட்டபின், தேர்வர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி தேர்வர்கள் அவர்களுக்கு வழங்கப்படும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை கல்லூரிச் சேர்க்கைக்கும் மற்றும் அவசரத்தேவைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். பின்னர் மேல்நிலைத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சழுத்தம் செய்து பள்ளிக்கு விநியோகிக்கப்படும். அதன்படி, 16.05.2018 அன்று மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிட்ட பின்னர், 18.05.2018 பிற்பகல் முதல் www.peps.tn.nic.in மற்றும் www.peps.nic.in ஆகிய இரு இணையதள முகவரிகளிலிருந்து அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அவர் தம் பள்ளித் தேர்வர்களுக்கும், தனித்தேர்வர் தேர்வுமைய பள்ளித் தலைமையாசிரியர்கள் தமது மையத்தில் தேர்வெழுதிய தனித்தேர்வர்களுக்கும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தங்களுக்குப் வழங்கப்பட்ட USER ID, PASSWORD-ஐக் கொண்டு பதிவிறக்கம் செய்து அச்சான்றிதழ்களில் உள்ள விவரங்களை சரிபார்த்து, பள்ளி தலைமையாசிரியரின் கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையிட்டு தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். மேற்படி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வருகிற 21.05.2018 அன்று பிற்பகல் முதல் பள்ளித் தேர்வர்கள்/தனித் தேர்வர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகள்/தனித்தேர்வர் தேர்வு மையம் மூலமாக விநியோகம் செய்யப்படவேண்டும். மேற்படி நிர்ணயிக்கப்பட்ட தேதியில் மட்டுமே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை விநியோகம் செய்ய வேண்டும். பள்ளித் தேர்வர்கள் / தனித்தேர்வர்கள் தேவைப்படின் அவரவர்களே நேரடியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை http://www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து 21.05.2018 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE