உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்


முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Wednesday, April 18, 2018

CLASS 10 SOCIAL SCIENCE EM MODEL QUESTION PAPERS MARCH 2018 - T.S.SARAVANANCLASS 10 SOCIAL SCIENCE EM MODEL QUESTION PAPERS MARCH 2018 - T.S.SARAVANAN S/O P.SIVABALAN (Late) B.Sc(Chem),B.Ed.,M.A(Eng.Lit),M.Phil(Eng.Lit),B.A(His) 17/1-239/72 A- 5,KARUMALAIKOODAL, NEHRU NAGAR, METTUR DAM (R.S), SALEM (D.T), - 636402 EMAIL; sharavananvepp@gmail.com For conversation: 8675509227 DOWNLOAD


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, April 17, 2018

CLASS 10 SCIENCE TM MARCH 2018 PUBLIC EXAMINATION 2017 -18 SCIENCE - KEY ANSWERS PREPARED BY I.CHINNAPPARAJ,CLASS 10 SCIENCE TM MARCH 2018 PUBLIC EXAMINATION 2017 -18 SCIENCE - KEY ANSWERS PREPARED BY I.CHINNAPPARAJ, MSC.,M.PHIL.,B.ED., B.T-ASST – SCIENCE DE BRITTO HR SEC SCHOOL DEVAKOTTAI – 630303. SIVAGANGAI DISTRICT. DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

CLASS 10 SCIENCE EM PUBLIC EXAMINATION 2017 -18 SCIENCE - KEY ANSWERS PREPARED BY M.G RAYMOND & JOHNSON PRABHU,CLASS 10 SCIENCE EM PUBLIC EXAMINATION 2017 -18 SCIENCE - KEY ANSWERS PREPARED BY M.G RAYMOND & JOHNSON PRABHU, ST.PAUL'S MAT. HR. SEC. SCHOOL, BLOCK-4, NEYVELI. 9442980841 /9629705161 DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, April 15, 2018

சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் அறிவிக்கப்படும் மேலும் பணி ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்


சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் அறிவிக்கப்படும் மேலும் பணி ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட சிறப்புப் பாடங்களை கற்றுக்கொடுக்க சிறப்பாசிரியர்கள் பணிபுரிகிறார்கள். இதுவரையில் சிறப்பாசிரியர் பணியிடங்கள் பதிவுமூப்பு அடிப்படையில் நிரப்பப்பட்டு வந்தன. இந்த ஆண்டு முதல்முறையாக சிறப்பாசிரியர் தேர்வுமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித்தேர்வு நடத்தி சிறப்பாசிரியர்களை தேர்வுசெய்ய அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆகிய பாடங்களில் 1,325 சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 27 முதல் ஆகஸ்டு 18-ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக பெறப்பட்டன. செப்டம்பர் மாதம் 23-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை 35,781 பேர் எழுதினர். எழுத்துத்தேர்வு முடிந்தவுடன் ஆசிரியர் தேர்வு வாரியம் கீ ஆன்சர் எனப்படும் உத்தேச விடைகளை வெளியிடுவது வழக்கம். அதன்படி, அக்டோபர் 10-ம் தேதி கீ ஆன்சர் வெளியிடப்பட்டது. பொதுவாக கீ ஆன்சர் வெளியிட்ட அடுத்த சில வாரங்களில் தேர்வு முடிவும், இறுதி விடைகளும் வெளியிடப்படும். ஆனால், சிறப்பாசிரியர் தேர்வில், கீ ஆன்சர் வெளியிட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இன்று சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும் பணி ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளர். 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்


பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது: 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் - மைச்சர் செங்கோட்டையன் தகவல்! ஈரோடு மாவட்டம் கோபி முருகன்புதூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் முதல்வர்எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வி துறைக்கு மட்டும் ரூ.27 ஆயிரத்து 205 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. வருகிற 21-ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.ஆனால், பிளஸ்-1 வகுப்பில் இருந்து பிளஸ்-2 செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளதால் கோடை விடுமுறை அவர்களுக்கு பொருந்தாது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும். அதற்கு முன்னதாக வருகிற 2-ஆம் தேதி முதல் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.அரசு நிர்ணயித்ததை விட தனியார் பள்ளிக்கூடங்கள் அதிககட்டணம் வசூலித்தால் இதுபற்றி முன்னாள் நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிடம் புகார் அளிக்கலாம். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 3 ஆயிரம் அரசு பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க அரசு ரூ.60 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதுதவிர 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.463 கோடி தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.பள்ளிகள் திறந்ததும் அரசு பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று கூறினார்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, April 14, 2018

ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தமிழக அரசு உத்தரவு

ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தமிழக அரசு உத்தரவு | தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 7 சதவீதமாக உயர்த்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதேபோன்று ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:- ஓய்வு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏற்கனவே இருந்து வரும் அகவிலைப்படி 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு குடும்ப ஓய்வூதியர்களுக்கும் பொருந்தும். 1.1.2018 முதல் இந்த அகவிலைப்படி உயர்வு கணக்கிடப்பட்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதத்துக்கான நிலுவைத்தொகை ஓய்வூதியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
LATEST EDUCATION AND EMPLOYMENT NEWS
LATEST STUDY MATERIALS-QP-ANWER KEY DOWNLOAD
LATEST QUESTION PAPERS DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE