உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Saturday, June 16, 2018

CTET - மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: ஜூன் 22 முதல் விண்ணப்பிக்கலாம்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (சி.டி.இ.டி.) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வுக்கு வருகிற 22-ஆம் தேதி முதல் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூலை 19 கடைசி தேதியாகும்.

பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர்களை நியமிப்பதற்கு சி.டி.இ.டி. தேர்வு நடத்தப்படுகிறது.

மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் ஆரம்ப, உயர்நிலை வகுப்பு ஆசிரியர் பணிக்கு சி.டி.இ.டி. தேர்வு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்தத் தேர்வில் தாள்-1, தாள்-2 என இரண்டு தாள்கள் இடம்பெற்றிருக்கும்.

பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை மட்டும் ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் தாள்-1 இல் மட்டும் பங்கேற்றால் போதுமானது. அதுபோல் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மட்டும் ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் தாள்-2 இல் பங்கேற்றால் போதுமானது.

இரண்டு நிலைகளிலும், அதாவது 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புபவர்கள் இரண்டு தாள்களும் எழுத வேண்டும்.

இந்த தேர்வானது 16-9-2018 அன்று நடத்தப்பட உள்ளது. காலையில் 9.30 மணி முதல் 12 மணி வரையிலும் தாள்-2 தேர்வும், பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணி வரை தாள்-1 தேர்வும் நடத்தப்படும்.

இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.ctet.nic.in  என்ற இணையதளம் வாயிலாக ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வருகிற 22-ஆம் தேதி முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஜூலை 19 ஆம் தேதி கடைசி நாளாகும்.

தேர்வறை அனுமதிச் சீட்டை 20-8-2018 அன்று ஆன்-லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

கல்வித் தகுதி:

பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் பிளஸ் 2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, 2 ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

8 ஆம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் பட்டப் படிப்புடன், 2 ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு மேற்கொண்டிருக்க வேண்டும். அல்லது பட்டப் படிப்புடன், பி.எட். படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

ஒரு தாள் மட்டும் எழுதும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.700, முதல் தாள், இரண்டாம் தாள் என இரண்டையும் எழுதுபவர்களுக்கு ரூ.1200. எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் ஒரு தாள் மட்டும் எழுத ரூ. 350 கட்டணம்.

இரண்டு தாள்களையும் எழுத ரூ. 600 செலுத்தினால் போதுமானது. மேலும் விவரங்களுக்கு சி.டி.இ.டி. இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.  DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, June 13, 2018

இனி ஆன்லைனில் நீட் தேர்வுகள் நடத்தப்படும் : மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு


இனி ஆன்லைனில் நீட் தேர்வுகள் நடத்தப்படும் : மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு | நீட் தேர்வுகள் இனி ஆன்லைனில் நடத்தப்படும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில்(MCI), இந்திய பல் மருத்துவ கவுன்சில்(DCI) ஆகியவற்றின் அனுமதி பெற்று நடத்தப்படும் எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு நீட் என்னும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என் மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு முதல் நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கைகள் நடந்தன. இதற்கு பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சிபிஎஸ்இ மூலம் நீட் தேர்வு கடந்த மே மாதம் 6ம் தேதி நடந்தது.இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியானது. இந்நிலையில் நீட் தேர்வுகள் இனி ஆன்லைனில் நடத்தப்படும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில் நீட் தேர்வுகளை இனி சிபிஎஸ்இ நடத்தாது என்றும் சிபிஎஸ்-க்கு பதிலாக தேசிய தேர்வு முகமை தேர்வுகளை நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுகள் இனி ஆன்லைனில் நடத்தப்படும் என்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. மேலும் 2019ம் ஆண்டுக்கான நீட் தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சி.பி.எஸ்.இ நடத்தி வரும் நீட் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் 2019ம் ஆண்டு முதல் தேசிய தேர்வு முகமை நடத்தும் என்றும் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நீட் தமிழ் வழி தேர்வில் பிழைகள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு


நீட் தமிழ் வழி தேர்வில் பிழைகள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழில் மொழி பெயர்த்ததில் பிழைகள் இருந்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டினர். நீட் தேர்வில் தமிழில் மொழி பெயர்த்ததில் 49 கேள்விகளில் பிழை என டி.கே.ரங்கராஜன் எம்.பி வழக்கு தொடர்ந்துள்ளார். நீட் தமிழ் வழி தேர்வில் பிழைகள் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, May 30, 2018

அரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு

அரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ததும் கலந்தாய்வு | அரசு பள்ளிகளில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்த பின்னரே கலந்தாய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2018-2019-ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வின்போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பொது இடமாறுதலுக்கு குறிப்பிட்டுள்ள நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். உபரியாக உள்ள.. காலிப்பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டும்போது ஆசிரியர்கள் உபரியாக உள்ள காலியிடங்களை இயக்குநரின் தொகுப்புக்கு கொண்டுசெல்ல வேண்டும். அந்த பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டக்கூடாது. இந்த இடங்களுக்கு மாறுதலும் வழங்கக்கூடாது. உபரி ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்த பின்னர் பொது இடமாறுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முன்னுரிமை மனமொத்த மாறுதல் அடிப்படையில் மாறுதல் பெற்றவர்கள் மீண்டும் ஏற்கெனவே பணிபுரிந்த பள்ளிக்கே மனமொத்த மாறுதலில் செல்ல அனுமதிக்கக் கூடாது. முன்னுரிமை பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு கலந்தாய்வின்போது முன்னுரிமை வரிசை அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.  DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ் 1 வகுப்புகளுக்கான பொது தேர்வு முடிவுகள் | 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி..

பிளஸ் 1 வகுப்புகளுக்கான பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில் மாணவ மாணவிகள் என 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதன் முறையாக பிளஸ்-1 மாணவ மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 பள்ளி மாணவ-மாணவிகளும், 1,753 தனித்தேர்வர்களும் எழுதினர். மொத்தத்தில் 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் தேர்வெழுதினர். விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி முடிவடைந்தது. இதையடுத்து பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியாகின. இதில் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளில் 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களில் 87.4 சதவீதம் பேரும், மாணவிகளில் 94.6 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருடம் மாணவர்களை விட மாணவிகள் 7.2 சதவீதம் பேர் அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தேர்வு முடிவில் 97.3 சதவீதம் தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து 96.4 சதவீதம் தேர்ச்சியுடன் திருப்பூர் 2வது இடமும் மற்றும் 96.2 சதவீதம் தேர்ச்சியுடன் கோவை 3வது இடமும் பிடித்துள்ளன. 80.21 சதவீதம் தேர்ச்சியுடன் விழுப்புரம் கடைசியிடம் பிடித்துள்ளது. மொத்தம் 2,054 மேனிலை பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதேபோன்று 2,724 அரசு பள்ளிகளில் 188 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. | RESULT
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, May 29, 2018

PLUS ONE RESULT - MARCH 2018 | பிளஸ் 1 பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று (மே 30) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகின்றன.


இன்று பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு இந்த ஆண்டு முதல்முறையாக நடத்தப்பட்ட பிளஸ் 1 பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று (மே 30) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகின்றன. கடந்த ஆண்டு வரையில் பிளஸ் 1 தேர்வானது பள்ளி அளவிலான சாதாரண தேர்வாகவே நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டிலிருந்துதான் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 போன்று பிளஸ் 1 தேர்வும் பொதுத்தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில், முதலாவது பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 7 முதல் ஏப்ரல் 16-ம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவ - மாணவிகள், தனித்தேர்வர்கள் என 8 லட்சத்து 63 ஆயிரம் பேர் தேர்வெழுதியுள்ளனர். இந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள லாம் www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் | 52 புதிய கல்வி மாவட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...


பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரிக்கு இணையான பதவியாக இருப்பதால் அப்பணியிடங்களை மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பணியிடங்கள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள், 2 மாவட்ட முறைசாரா கல்வி அலுவலர், ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக தற்போது மாற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, புதிதாக 52 கல்வி மாவட்டங்களை தொடங்க பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டார். அதன்படி, 52 புதிய கல்வி மாவட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந் துள்ளது. DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, May 28, 2018

8 லட்சத்து 63 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது.


8 லட்சத்து 63 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு | 8 லட்சத்து 63 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) வெளியிடப்படுகிறது. பிளஸ்-1 தேர்வு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதன் முறையாக பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 பள்ளி மாணவ-மாணவிகளும், 1,753 தனித்தேர்வர்களும் எழுதினர். மொத்தத்தில் 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் தேர்வெழுதினர். மேலும், வேலூர், கடலூர், புதுக்கோட்டை, கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் 62 ஆண் கைதிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் தேர்வெழுதினர். நாளை வெளியீடு மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதை தடுக்க 4,000 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது. விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி முடிவடைந்து உள்ளது. இதையடுத்து பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த தேர்வு முடிவுகளை ( www.tnresults.nic.in, www.dge.tn.nic.in, www.dge2.tn.nic.in ) என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, May 23, 2018

1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு


1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு | 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் இணையதளத்தில் மே 31  முதல் படிப்படியாக வெளியிடப்படுகின்றன. தமிழகத்தில் நீண்ட காலமாக மாற்றப்படாமல் இருந்த பள்ளி பாடத்திட்டம் இந்த ஆண்டுமுதல் படிப்படியாக மாற்றியமைக்கப்படுகிறது. முதல்கட்டமாக 1,6,9,11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதைத்தொடர்ந்து, மற்ற வகுப்புகளுக்கு அடுத்தடுத்த கல்வி ஆண்டுகளில் படிப்படியாக புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். இந்த நிலையில், 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்களை முதல்வர் கே.பழனிசாமி கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். புதிய புத்தகங்கள் இம்மாத இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளன. 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் மே 23-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அண்மையில் அறிவித்தார். அதன்படி, வெளியிடவில்லை. புதிய பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.tnscert.org) மே 31 இல் வெளியிடப்படுகின்றன. இணையதளத்தின் சர்வர் திறனுக்கு ஏற்ப, புதிய பாடப்புத்தகங்கள் வகுப்புகள் மற்றும் பாடங்கள் வாரியாக மே 31 இல் படிப்படியாக இணையதளத்தில் வெளியிடப்படும் என்று கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநரும், புதிய பாடத் திட்டக்குழுவின் உறுப்பினர்-செயலருமான ஜி. அறிவொளி தெரிவி்த்தார். பள்ளி மாணவர்களுக்கான அனைத்து பாடப்புத்தகங்களையும் வகுப்புகள், பாடங்கள் வாரியாக தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் இணையதளத்தில் (www.textbooksonline.tn.nic.in) பார்க்கலாம். அந்த வகையில், 1,6,9,11-ம் வகுப்பு புதிய பாடப்புத்தகங்களையும் பாட நூல் கழக இணையதளத்தில் வெளியிட ஏற்பாடு செய்யப்படும் என்று அதன் நிர்வாக இயக்குநர் டி.ஜெகந்நாதன் தெரிவித்தார். DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு மறுகூட்டலுக்கு மே 24-ம் தேதி முதல் 26-ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.


எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு மறுகூட்டலுக்கு மே 24-ம் தேதி முதல் 26-ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி வழியாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையம் வழியாகவும் மே 24-ம் தேதி (நாளை) முதல் 26-ம் தேதி மாலை 5.45 மணி வரை மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கட்டணமாக மொழித்தாள், ஆங்கிலத் தாளுக்கு தலா ரூ.305, கணிதம், அறிவியல், சமூக அறிவியல், விருப்ப மொழிப்பாடம் ஆகியவற்றுக்கு தலா ரூ.205 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் இடத்திலேயே கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை மாணவர்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள விண்ணப்ப எண் மூலமாகத்தான் பின்னர் மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ள முடியும். சிறப்பு துணை பொதுத் தேர்வு பொதுத்தேர்வில் வெற்றிவாய்ப்பை இழந்தவர்கள், தேர்வுக்கு விண்ணப்பித்து கலந்துகொள்ளாதவர்களுக்கு ஜூன் 28-ம் தேதி சிறப்பு துணை பொதுத் தேர்வு நடத்தப்படும். இதற்கு விண்ணப்பிப்பது குறித்து தனியாக அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழில் சட்டப் பயிற்சி மனுபாத்ரா நிறுவனம் அறிமுகம்

தமிழில் சட்டப்பயிற்சி சேவைகளை மனுபாத்ரா பகுப்பாய்வு நிறுவனம் தொடங்கியுள்ளது. இதற்காக lawskills.com என்கிற இணையதளத்தினை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக மனுபாத்ரா இன்பர்மேஷன் நிறுவனத்தின் இயக்குநர் தீபக் கபூர் கூறுகையில், இந்தியாவில் சட்டக் கல்வி சிறப்பான வகையில் இருந்தாலும், சட்டக் கல்வி முடிப்பவர் கள் நீதிமன்ற நடைமுறைகளை அறிந்து கொள்வதற்காக வழக்கறிஞர்களிடத்தில் தனியாக பயிற்சி பெறுகின்றனர். இதனால் அவர்கள் சொந்தமாக தொழி லைத் தொடங்க சில ஆண்டுகள் கூடுதலாக செலவாகிறது. இந்த அனுபவப் பயிற்சி காலகட்டத்தை தவிர்க்கும் விதமாக லா ஸ்கில்ஸ் இணையதள பயிற்சி இருக்கும். அதுபோல கார்ப்பரேட்டுகள் ஈடுபடும் ஒப்பந்தங்கள், அவர்களுக்கான சட்ட நடைமுறைகளையும், மற்றும் வழக்கு நடைமுறைகளை தெரிந்து கொள்ளலாம். சட்ட மாணவர்கள் அல்லாதவர்களும் இந்திய சட்ட நடைமுறைகள் குறித்த கல்வி பெற இந்த இணைய தளம் உதவும். தேர்ந்த மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு தமிழில் சட்ட விவரங்களை அளிக்கிறோம். பயிற்சிக்கான சராசரி கட்டணம் ரூ.4,000 என்கிற அளவிலேயே நிர்ணயித்துள்ளோம். சட்டக் கல்லூரிகள் அளவில் இந்த இணைய தளத்தை கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளோம். தற்போது தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் சட்ட விவரங்களை அளிக்கிறோம் வரும் ஆண்டுக்குள் 10 மொழிகளில் அளிக்க உள்ளோம். தினசரி வழக்கு விவரங்கள் வரை இணையதளத்தில் உடனடியாக பார்க்க முடியும் என்றார். சட்டத் தகவல்கள் தேடல், பகுபாய்வு துறையில் உள்ள மனுபாத்ரா இதன் மூலம் சட்டக் கல்வி பயிற்சியிலும் கால்பதித்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு பள்ளிகளை மூடும் திட்டம் இல்லை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்


அரசு பள்ளிகளை மூடும் திட்டம் இல்லை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் | அரசு பள்ளிகளை மூடும் திட்டம் எதுவும் இல்லை என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகத்தில் 37,211 அரசு பள்ளிகளும் 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகளும் 12,419 தனியார் சுயநிதி பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இவற்றில் ஒரு கோடியே 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயில்கின்றனர். அரசு பள்ளிகளில், நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின்படி மாணவர்கள் எண்ணிக்கை குறித்த விவரங்களையும், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளின் எண்ணிக்கையையும் கணக்கெடுக்க பள்ளிக்கல்வித்துறை அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. , சுமார் 900 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 15-க்கும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளை அருகேயுள்ள பள்ளிகளுடன் இணைக்கலாமா என்று அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில், மாணவர் சேர்க்கை 10-க்கும் குறைவாக உள்ள 890 அரசு தொடக்கப்பள்ளிகளை மூட அரசு பரிசீலித்து வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதுதொடர்பாக சென்னையில் தனியார் தொலைக்காட்சிக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: அரசு தொடக்கப் பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் உடைய பள்ளிகளாக 892 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், மாணவர் எண்ணிக்கை குறையாமல் இருக்கவும் என்னென்ன வழிவகைகளை செய்யலாம் என்று ஆய்வு செய்துகொண்டிருக்கிறோம். அரசு பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை. 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, May 22, 2018

SSLC RESULT MARCH 2018 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.


SSLC RESULT MARCH 2018 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும். 16.03.2018 முதல் 20.04.2018 வரை நடைபெற்ற மார்ச் / ஏப்ரல் 2018, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 23.05.2018 அன்று காலை 09.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். 
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres), அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்குக் குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும். தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்குத் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக ( SMS) அனுப்பப்படும். | DOWNLOAD  
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் 28.05.2018 பிற்பகல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்தல் 28.05.2018 பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் வழியாகவும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், 28.05.2018 பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள் / தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழைத் தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். | DOWNLOAD 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

SSLC EXAM MARCH 2018 RE TOTAL DETAILS | மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் பள்ளி மாணாக்கர் மறுகூட்டலுக்கான கட்டணத்தை தாங்கள் பயின்ற பள்ளியில் செலுத்த வேண்டும்.


மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை மார்ச் / ஏப்ரல் 2018, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாம் தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும் மறுகூட்டலுக்கு (Retotalling) விண்ணப்பிக்கலாம். மார்ச் / ஏப்ரல் 2018 பத்தாம் வகுப்பு தேர்வெழுதி விடைத்தாட்களின் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விழைவோர் 24.05.2018 (வியாழக் கிழமை) முதல் 26.05.2018 (சனிக் கிழமை) மாலை 5.45 மணி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வழியாகவும் விண்ணப்பிக்க வேண்டும். மறுகூட்டல் கட்டணம் பகுதி – I மொழி - ரூ.305/- பகுதி – II மொழி (ஆங்கிலம்) - ரூ.305/- பகுதி – III - கணிதம், அறிவியல் மற்றும் - ரூ.205/- சமூக அறிவியல் பகுதி – IV விருப்ப மொழிப்பாடம் - ரூ.205/- மறுகூட்டலுக்கான கட்டணம் செலுத்தும் முறை மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி மாணாக்கர் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் பணமாகச் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ள இயலும். | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE


முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.