Wednesday, 26 April 2017

DGE G.O NO 270 DT 24.04.2017 - தேர்வுக் காலப் பணிகள் மற்றும் விடைத்தாள் திருத்தும் முகாம் பணிகள் மேற்கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு உழைப்பூதியம் / மதிப்பூதியம் உயர்த்தி வழங்குதல் - அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டது.


பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை / இடைநிலை / எட்டாம் வகுப்பு / தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வுகள் - தேர்வுக் காலப் பணிகள் மற்றும் விடைத்தாள் திருத்தும் முகாம் பணிகள் மேற்கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு உழைப்பூதியம் / மதிப்பூதியம் உயர்த்தி வழங்குதல் - அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டது. பள்ளிக் கல்வி (ஜிஇ(1)துறை அரசாணை (1டி) எண்.270, நாள்: 24.04.2017 விரைவில் நிலுவைத்தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

DOWNLOAD G.O

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழக அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்கள் ஆகியோருக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு : முதல்வர் அறிவிப்பு | தமிழக அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்கள் ஆகியோருக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழக அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்கள் ஆகியோருக்கு அகவிலைப்படியானது 4% உயர்த்தப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வானது ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு அமல் செய்யப்படும். இதன் மூலம் தற்பொழுது பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு ரூ.244 முதல் ரூ.3080 வரையும், ஓய்வு ஊதியதாரர்களுக்கு ரூ.122 முதல் ரூ.1540 வரையும் ஊதிய உயர்வு கிடைக்க உள்ளது. இதன் மூலம் 18 லட்சம் அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்கள் ஆகியோர் பயன் பெறுவார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இளநிலை அறிவியல் அலுவலர், சுகாதார புள்ளியியலாளர் உட்பட 3 டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு


இளநிலை அறிவியல் அலுவலர், சுகாதார புள்ளியியலாளர் உட்பட 3 டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு | இளநிலை அறிவியல் அலுவலர், வட்டார புள்ளியியலாளர் உள்ளிட்ட 3 டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மே மாதம் நடைபெறுகிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தடய அறிவியல் சார்நிலைப் பணியில் அடங்கிய இளநிலை அறிவியல் அலுவலர் பணியில் 30 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எழுத்துத் தேர்வு நடத்தப் பட்டது. இத்தேர்வில் 4,413 பேர் கலந்துகொண்டனர். இவர்களில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலுக்கு 65 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மே 5-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். தமிழ்நாடு மருத்துவ சார் நிலைப் பணியில் அடங்கிய வட்டார சுகாதார புள்ளியியலாளர் பணியில் 173 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை 4,270 பேர் எழுதினர். இதில் நேர்காணலுக்கு 342 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மே 15 முதல் 19-ம் தேதி வரை நடைபெறும். குரூப்-3 ஏ தேர்வில் அடங்கிய கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பணியில் 24 காலியிடங்களை நிரப்ப கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு 3-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் 46 ஆயிரத்து 797 பேர் கலந்துகொண்டனர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு (பட்டியல்-5) 34 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மே 8-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக தெரிவு செய் யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

187 மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை நாடு முழுவதும் 2022-ம் ஆண்டுக்குள் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தகவல்.


187 மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை நாடு முழுவதும் 2022-ம் ஆண்டுக்குள் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தகவல் | நாடு முழுவதும் 2022-ம் ஆண் டுக்குள் புதிதாக 187 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளதாக மத்திய நகர்ப்புற மேம்பாடு மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். சென்னை போரூர் ராமச் சந்திரா பல்கலைக்கழகத்தின் 25-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக அரங்கில் நேற்று நடந்தது. பல்கலைக்கழக வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம் விழாவுக்கு தலைமை தாங்கி னார். துணைவேந்தர் டாக்டர் ஜே.எஸ்.என்.மூர்த்தி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, சிறந்து விளங்கிய மாணவ - மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கினார். எம்பிபிஎஸ் மாணவி உமா ரவிசங்கர் 5 தங்கப் பதக்கங்களை பெற்றார். வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம் 365 பேருக்கு சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது: கொல்கத்தா மருத்துவக் கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி 1835-ம் ஆண்டு தொடங் கப்பட்டன. 1985-ம் ஆண்டு வரை பெரும்பாலும் அரசு மருத்துவக் கல்லூரிகளே செயல்பட்டு வந்தன. கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகம் கொண்ட நாடுகளில் தனியார் பங்களிப்பு இல்லாமல் மக்களுக்கு மருத்துவச் சேவை வழங்குவது கடினம். தொலைநோக்குப் பார்வையுடன் என்.பி.வி.ராமசாமி உடையார் இந்த மருத்துவக் கல்வி மையத்தை தொடங்கியுள்ளார். தனியார் மருத்துவக் கல்லூரி தேவை என்பதை உணர்ந்துதான் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் இதற்கு அனுமதி கொடுத்துள்ளார். திறமையுடன் மனிதாபிமானம், அர்ப்பணிப்பு உணர்வுள்ள டாக்டர்களை மருத்துவக் கல்லூரிகள் உருவாக்க வேண்டும். வளர்ந்த நாடுகளில் 10 ஆயிரம் பேருக்கு 20 டாக்டர்கள் உள்ளனர். இந்தியாவில் 10 ஆயிரம் பேருக்கு 6 டாக்டர்கள் மட்டுமே இருக்கின்றனர். இந்தியாவில் 10.5 லட்சம் டாக்டர்கள் இருக்க வேண்டும். ஆனால், 6.5 லட்சம் டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். உலக சுகாதார நிறுவனம் 1,000 பேருக்கு ஒரு டாக்டர் இருக்க வேண்டும் என்று சொல்கிறது. இந்தியாவில் 1,700 பேருக்கு ஒரு டாக்டர் உள்ளார். நாடு முழுவதும் 2022-ம் ஆண்டுக்குள் புதிதாக 187 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நிதி ஆயோக் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இவ்வாறு வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். நிலையான ஆளுநர் விழா முடிவில் நிருபர்களிடம் பேசிய மத்திய அமைச்சர், ''யாராக இருந்தாலும் முதலில் அவரவர் தாய்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். பிறகு பல மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறு இல்லை. படிக்கும்போதே ஆங்கில மொழிய கற்றுக் கொள்கிறோம். இந்தியையும் கற்றுக்கொள்வதில் தவறு இல்லை. தமிழகத்துக்கு விரைவில் நிலையான ஆளுநர் நியமிக்கப்படுவார்'' என்றார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மாணவர்கள் நலன் கருதி 6 ஆயிரம் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பள்ளிக்கல்வி துறை செயலாளர் உத்தரவு


மாணவர்கள் நலன் கருதி 6 ஆயிரம் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பள்ளிக்கல்வி துறை செயலாளர் உத்தரவு | தமிழகத்தில் நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அங்கீகாரம் கேட்டு தொடக்கப்பள்ளி இயக்குனர், மெட்ரி குலேஷன் பள்ளிகள் இயக்குனர் ஆகியோருக்கு விண்ணப்பித்து உள்ளன. இதில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் இட வசதி போதாத பள்ளிகள் 740 உள்ளன. இந்த பள்ளிகள் தவிர 3 ஆயிரம் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அங்கீகாரம் கேட்டு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகத்துக்கும், 3 ஆயிரம் நர்சரி, பிரைமரி பள்ளிகள் தொடக்கப்பள்ளி இயக்குனருக்கும் அங்கீகாரம் கேட்டு விண்ணப்பங்கள் அனுப்பி உள்ளன. அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத அந்த பள்ளிகள் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் என்பதாலும், அவர்கள் பெறும் கல்வி சான்றிதழ் தகுதி உடையதாக இருக்க வேண்டும் என்பதாலும் தகுதி உடைய பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க பள்ளிக்கல்வி துறை முடிவு செய்தது. எனவே தகுதி உடைய நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு 2018 மே 31-ந்தேதி வரை அங்கீகாரம் வழங்க பள்ளிக்கல்வி துறை செயலாளர் த.உதயச்சந்திரன் உத்தரவிட்டார். அதன்படி மாணவர்கள் நலன் கருதி 3 ஆயிரம் நர்சரி, பிரைமரி பள்ளிகள் மற்றும் 3 ஆயிரம் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என மொத்தம் 6 ஆயிரம் பள்ளிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட உள்ளன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 25 April 2017

PG REGULARAISATION ORDER | 2013-14 மற்றும் 2014-15 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட முதுகலையாசிரியர்கள் பணி நியமனம், முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை கல்விச்சோலையில் வெளியிடப்பட்டுள்ளது


PG REGULARAISATION ORDER - BATCH 2013-14, 2014-15 | 2013-14 மற்றும் 2014-15 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட முதுகலையாசிரியர்கள் பணி நியமனம்,  முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை கல்விச்சோலையில் வெளியிடப்பட்டுள்ளது. PG REGULARAISATION ORDER - BATCH 2013-14, 2014-15 | முதுகலையாசிரியர்கள் நேரடி நியமனம் - 2013-14 மற்றும் 2014-15 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டவர்கள் – பணி நியமனம் பெற்று முதுகலை ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர்களாக பணிபுரிபவர்கள் – முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்குதல் | 1. அரசாணை (நிலை) எண்.47, பள்ளிக்கல்வித் (சி2) துறை, நாள். 20.03.2013 அரசாணை (நிலை) எண்.110 பள்ளிக் கல்வி பக 2(1) துறை நாள்.02.07.2013 மற்றும் அரசாணை (நிலை) எண்.348 பள்ளிக்கல்வி (வ.செ.2) துறை நாள்.10.12.2013 2. அரசாணை(2டி) எண்.54 பள்ளிக் கல்வி பக 2(1) துறை நாள்.27.08.2014 மற்றும் அரசாணை (நிலை) எண்.148 பள்ளிக் கல்வி (மேநிக) துறை நாள்.22.09.2014 3. சென்னை-6, பள்ளிக் கல்வி இயக்குநரின் கடித ந.க.எண்.1974/டபிள்யு3/இ3/2012 நாள்.14.10.2014 மற்றும் 03.03.2015 4. சென்னை 6, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரின் செயல்முறைகள் ந.க.எண்.9287/ஆ1/2013, நாள்.27.02.2015 மற்றும் 20.05.2015 5. இவ்வியக்கக கடிதம் ந.க.எண். 18444/டபிள்யு3/இ3/2015, நாள். 23.03.2015 6. அரசு கடித எண்.11018/பக2(1)-15-4, நாள்.22.09.2015

DOWNLOAD ORDER

 

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வி துறையில் மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் சார்ந்த இயக்குநர்கள் வெளியிட்ட இப்புதிய பொது மாறுதல் கோரும் விண்ணப்பத்தினை பயன்படுத்த வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா ? விரிவான தகவல்கள்...


பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வி துறையில் மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் சார்ந்த இயக்குநர்கள் வெளியிட்ட இப்புதிய பொது மாறுதல் கோரும் விண்ணப்பத்தினை பயன்படுத்த வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா ? பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வி துறையில் மாறுதலுக்கு விண்ணப்பிப்போர் இந்த 3 பக்க விண்ணப்பத்தை பயன்படுத்த இயக்குநர் உத்தரவு.

DSE NEW TRANFER APPLICATION 2017 - PDF

DSE NEW TRANFER APPLICATION 2017 - EDITABLE

DEE NEW TRANFER APPLICATION 2017 - PDF


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளி கல்வித்துறையில் இயக்குநர் நிலையில் மாற்றம் | பள்ளிக்கல்வி இயக்குநராக இளங்கோவன் நியமனம். தொடக்கக்கல்வி இயக்குநராக கார்மேகம் நியமிக்கப்பட்டுள்ளார்.விரிவான தகவல்கள்


பள்ளி கல்வித்துறையில் இயக்குநர் நிலையில் மாற்றம் | பள்ளிக்கல்வி இயக்குநராக இளங்கோவன் நியமனம். தொடக்கக்கல்வி இயக்குநராக கார்மேகம் நியமிக்கப்பட்டுள்ளார்.விரிவான தகவல்கள் 1. பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், ஆர்எம்எஸ்ஏ இயக்குநராக மாறுதல். 2. தொடக்க கல்வித்துறை இயக்குநர் இளங்கோவன், பள்ளி கல்வித்துறை இயக்குநராக மாறுதல். 3. ஆர்.எம.எஸ்.ஏ இயக்குநர் அறிவொளி, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநராக மாறுதல். 4. ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ராமேஸ்வர முருகன், முறைசாரா கல்வி இயக்குநராக மாறுதல். 5. முறைசாரா கல்வி இயக்குநர் பழனிசாமி, பாடநூல் கழகத்தில் செயலராக மாறுதல். 6. பாடநூல் கழக செயலாளர் கார்மேகம், தொடக்க கல்வித்துறை இயக்குநராக மாறுதல்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 23 April 2017

சிபிஎஸ்இ இணையதளத்தில் நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு


சிபிஎஸ்இ இணையதளத்தில் நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு | மே 7-ல் நடக்கும் நீட் தேர்வுக் கான ஹால்டிக்கெட் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோயம் புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் உட்பட நாடு முழுவதும் 104 நகரங்களில் 2,200 மையங்களில் நீட் தேர்வு நடக்க உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட 10 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வு முடிவு ஜூன் 8-ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக் கான ஹால்டிக்கெட் (அனுமதி சீட்டு) இணையதளத்தில் (cbseneet.nic.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் மாண வர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதி, பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்த விலக்கு அளிக்க வகைசெய்யும் மசோதா, சட்டப்பேரவையில் பிப்ரவரி 1-ல் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை. நாடு முழுவதும் பொதுவாக நடத்தப்படும் தேர்வுக்கு தமிழகத் துக்கு மட்டும் விலக்கு அளிக்க இயலாது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா சமீபத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.CLICK

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 22 April 2017

தொடக்கக் கல்வி - DEE NEW TRANSFER APPLICATION 2017 - 2018 NEW APPLICATION FORM PDF.


தொடக்கக் கல்வி - DEE NEW TRANSFER APPLICATION 2017 - 2018 NEW APPLICATION FORM PDF  | தொடக்கக்கல்வி | பொது மாறுதல் 2017 - 2018 ஆம் கல்வி ஆண்டில் | | ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் | | பொது மாறுதல் - கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (நாள்: 20.04.2017) | |தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (நாள்: 20.04.2017) | | புதிய மாறுதல் விண்ணப்ப படிவம் விரைவில் வெளியிடப்படும் - தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவிப்பு | தொடக்க கல்வி துறை ஆசிரியர்கள் புதிய விண்ணப்பத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்CLICK HERE

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு ஏப். 24 முதல் விண்ணப்பிக்கலாம்.

ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு ஏப். 24 முதல் விண்ணப்பிக்கலாம் | அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இடமாறுதல் கோரி ஏப்ரல் 24 முதல் மே 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வரும் கல்வியாண்டில் (2017-18) அரசு, நகராட்சி, தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் (முதுகலை பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், சிறப்பாசிரியர்) பொது இடமாறுதல் கலந்தாய்வு குறித்து வழிகாட்டி நெறிமுறைகள் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தொடக்கக்கல்வி பொது மாறுதல் 2017 - 2018 | தொடக்க கல்வி துறை ஆசிரியர்கள் புதிய விண்ணப்பத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தொடக்கக்கல்வி | பொது மாறுதல் 2017 - 2018 ஆம் கல்வி ஆண்டில் | | ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் | | பொது மாறுதல் - கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (நாள்: 20.04.2017) | |தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (நாள்: 20.04.2017) | | புதிய மாறுதல் விண்ணப்ப படிவம் விரைவில் வெளியிடப்படும் - தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவிப்பு | தொடக்க கல்வி துறை ஆசிரியர்கள் புதிய விண்ணப்பத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Right to Education - 2017-18 Online Application Entry / ஆன்லைன் விண்ணப்பம் பதிவேற்றம்

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 பிரிவு 12(1) (C) இன்படி அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட , கிராமபுர ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை கோரும் விண்ணப்பப் படிவம் . இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க இறுதி நாள் மே 18, 2017. இந்த ஆண்டு வெளிப்படைத்தன்மையுடனும் உரிய வகையிலும் நிரப்பப்பட உள்ள இந்த 25% இட ஒதுக்கீட்டின்படி அனைத்து சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளிலும் இலவச கல்வியை கிராமபுற ஏழை மாணவர்கள் பயன்படுத்த செய்வோம். தற்போதுவரை தம் பகுதியில் உள்ள அரசு பள்ளியை ஒதுக்கிவிட்டு ஏதோ ஓர் மோகத்தால் தனியார் பள்ளிகளில் சேர்த்து பணம் செலவு செய்யும் கிராமபுற ஏழை மாணவர் குடும்பங்களுக்கு முதலில் இத்தகவலை கொண்டு சேர்ப்போம்! ஆன்லைன் மூலமான விண்ணப்பத்திற்கான வழிமுறைகள் மற்றும் இணைய இணைப்புக்கு கீழ்கண்ட இணைப்பினை சொடுக்கவும். http://tnmatricschools.com/rte/rtehome.aspx உங்கள் மாவட்ட அளவில் இந்த வாய்ப்பை பயன்படுத்தக்கூடிய பள்ளிகள் யாவை? அதில் இதற்கான 25% இடங்களின் எண்ணிக்கை எத்தனை என்று அறிய கீழ்காணும் இணைப்பை சொடுக்கவும். http://tnmatricschools.com/rte/rtepdf.aspx ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க நேரடி இணைப்பிற்கு கீழே சொடுக்கவும். http://tnmatricschools.com/rte/rteapp.aspx?c=QfY$!z)A
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க என்னென்ன செய்ய வேண்டும்? மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு இயக்குநர் ஆலோசனை

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க என்னென்ன செய்ய வேண்டும்? மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு இயக்குநர் ஆலோசனை | அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி களுக்கும் அவர் அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
1.       பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இதை முன்னி லைப்படுத்தி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப் படுத்த வேண்டியது அவசியம்.
2.       அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க் கையை அதிகப்படுத்துவது தொடர்பாக உதவி மற்றும் கூடு தல் தொடக்கக் கல்வி அதிகாரி களுடன் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் கலந்தாலோசனை செய்ய வேண்டும்.
3.       அங்கன்வாடிகளில் படிக்கும் குழந் தைகளைக் கண்டறிந்து அவர் களை அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4.       மக்கள்தொகை கணக்கெடுப் பின்படி, வீடு வீடாகச் சென்று, பள்ளி செல்லக்கூடிய குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
5.       பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக பேனர்கள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
6.       அரசின் மூலம் வழங்கப்படும் விலையில்லா நலத்திட்டங்களான புத்தகம், பாடக் குறிப்பேடு, சீருடை, காலணி, கணித உபகரணப் பெட்டி, கிரையான், வண்ண பென்சில்கள், அட்லஸ், ஸ்கூல் பேக் ஆகிய அனைத்தும் அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன என்ற விவரத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
7.       அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் பணியாற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களின் உதவியுடன் மேற்கண்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
8.       மாணவர்களுக்கு வசதியான, காற்றோட்டமான கட்டிடங்கள், மதிய உணவு, பாதுகாப்பான குடிநீர், கழிப்பிட வசதி, தகுதி படைத்த நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் இருப்பதை பெற்றோருக்கு எடுத்துக்கூற வேண்டும்.
9.       குழந்தை தொழிலாளர்களைக் கண்டறிந்து அவர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10.   அரசு பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வி அளிக்கப்படுகிறது என்றும், அந்த வகுப்புகளில் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு தரமான ஆங்கிலவழிக் கல்வி வழங்கப்படுகிறது என்றும் ஆசிரியர்கள் மற்று மாணவர்கள் மூலம் பேரணி நடத்தி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
11.   இடைநின்ற மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
 இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மலைக் கிராமங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மலைக் கிராமங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | மருத்துவ பட்ட மேற்படிப்பு ஒழுங்குமுறை விதிகளின்படி குக்கிராமங்கள் மற்றும் மலைக் கிராமங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ பட்ட மேற்படிப்பில் கூடுதல் மதிப்பெண் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த அரசு மருத்துவரான ராஜேஸ் வில்சன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை சோலையார்நகர் என்னும் அடர்ந்த மலைப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவி சிவில்-சர்ஜனாக பணிபுரிந்து வருகிறேன். 2017-18 ஆண்டுக்கான மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான நீட் தேர்வில் பங்கேற்று 824.58 மதிப்பெண் பெற்று, அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் 26 ஆயிரத்து 525-வது இடத்தில் உள்ளேன். மருத்துவ பட்ட மேற்படிப்பு ஒழுங்குமுறை விதிகள்-2000 பிரிவு 9(ஏ)ன்படி அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு உள்ள 50 சதவீத இட ஒதுக்கீட்டின்படி குக்கிராமங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் பணிபுரிந்தால் அவர்களுக்கு பணிபுரிந்த ஒவ்வொரு ஆண்டுக்கும் 10 சதவீத மதிப்பெண் போனஸாக வழங்க வேண்டும். அதன்படி நான் 3 ஆண்டுகளாக மலைக் கிராமத்தில் பணிபுரிந்து வருவதால் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணோடு எனக்கு 30 சதவீத மதிப்பெண் கூடுதலாக வழங்க வேண்டும். ஆனால் 2017-18-ம் ஆண்டுக்கு மருத்துவ பட்ட மேற்படிப்புக்கு தமிழக அரசு வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பேட்டில், நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை 90 மதிப்பெண்ணுக்கு கணக்கிட்டும், மலைக் கிராமங்கள், குக்கிராமங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிந்த முன்அனுபவத்துக்கு அதிகபட்சமாக 10 மதிப்பெண் கூடுதலாக வழங்கி, மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களுக்கு தரவரிசை வழங்கி, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பாணை சட்டவிரோத மானது. எனவே எனக்கு நீட் தேர்வில் பெற்ற மதிப் பெண்ணோடு கூடுதலாக 30 சதவீத மதிப்பெண் வழங்கினால் ஆயிரத்து 500-க்கு ஆயிரத்து 136.95 மதிப்பெண் கிடைக்கும் பட்சத்தில் சேர்க்கையும் எளிதாக கிடைக்கும். எனவே அரசுப் பணியில் உள்ள எனக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா பிறப்பித்த உத்தரவில், ''மனுதாரர் அரசுப் பணியில் உள்ளதால் அவரால் மாநில அரசின் இட ஒதுக்கீட்டுக்கு மட்டும்தான் விண்ணப்பிக்க முடியும். அகில இந்திய இட ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பிக்க முடியாது. தமிழக அரசு கொண்டுவந்துள்ள தமிழ்நாடு மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான சட்ட மசோதாவுக்கு, குடியரசுத் தலைவர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால், அந்த மசோதா மனுதாரரை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது. மேலும் மலைக் கிராமங்கள், குக்கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் அரசுப் பணியில் உள்ள மருத்துவர் களுக்கு பட்ட மேற்படிப்பில் கூடுதல் மதிப்பெண் வழங்க முடியாது என தமிழக அரசு மறுக்க முடியாது. ஆகவே மனுதாரருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும்'' என உத்தரவிட்டார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இலவச கல்வி திட்டத்தில் ஏழை மாணவர்கள் பட்டப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

இலவச கல்வி திட்டத்தில் ஏழை மாணவர்கள் பட்டப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு | இலவச கல்வி திட்டத்தில் ஏழை மாணவர்கள் பட்டப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பேராசிரியர் எஸ்.கருணாநிதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: ஏழை மாணவர்கள் இளங்கலை பட்டப் படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் இலவச கல்வி திட்டத்தை சென்னை பல்கலைக்கழகம் நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்கீழ், வரும் கல்வி ஆண்டில் (2017-18) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள சென்னை பல்கலைக்கழக இணைப்பு அங்கீகார கல்லூரிகளில் (சுயநிதி கல்லூரிகள் மற்றும் உதவி பெறும் கல்லூரிகள்) சேர விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட 3 மாவட்டங் களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், விவசாய மற்றும் கூலி வேலை செய்யும் பெற்றோர்களின் பிள்ளைகள், குடும்பத்தில் முதல் முறையாக பட்டப் படிப்பு படிக்க வரும் மாணவர்கள், கைம்பெண் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் பிள்ளைகள் ஆகியோருக்கு இந்த இலவச கல்வி திட்டத்தில் முன் னுரிமை அளிக்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத் துக்குள் இருக்க வேண்டும். இலவச கல்வி திட்டத் தில் சேருவதற்கான விண்ணப் பத்தையும் இதர விவரங்களையும் சென்னை பல்கலைக்கழக மக் கள்தொடர்பு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் பல்கலைக்கழக இணைய தளத்தில் (www.unom.ac.in) இருந் தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப் பட்ட தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளிலிருந்து (மே 12) 15 நாட்களுக்குள் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ் 1க்கும் பொதுத் தேர்வு - பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை

பிளஸ் 1க்கும் பொதுத் தேர்வு - பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை | பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டுப் பொதுத் தேர்வு நடத்துவதுபோல பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. விரைவில் இந்த திட்டம் தமிழகத்தில் நடைமுறைக்கு வர உள்ளது. தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி வகுப்பு கடந்த 1978ம் ஆண்டு வரை பள்ளிகளில் கற்பிக்கப்பட்டது. அந்த வகுப்பு முறை நீக்கப்பட்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு முறைகள் கொண்டு வரப்பட்டன. அதற்கு பிறகு தமிழகத்தில் இதே முறைதான் நடைமுறையில் இருந்து வருகிறது. 5 ஆண்டுக்கு ஒரு முறை பாடப்புத்தகங்கள் மாற்றப்படும். இவை எல்லாம் மனப்பாடம் செய்யும் முறையில் இருப்பதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பாடப்புத்தகங்கள் மாற்றம் செய்யப்படாமல் உள்ளது. மேலும், சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகத்தில் சிபிஎஸ்இ பாடங்கள் போல தரம் இல்லை என்றும் கல்வியாளர்கள், பெற்றோர் குறை கூறி வருகின்றனர். இதையடுத்து, சிபிஎஸ்இ பாடப்புத்தகங்களை அப்படியே தமிழில் மொழி மாற்றம் செய்யும் பணி நடந்துவருகிறது. முதலில் 7, 9, பிளஸ் 1 வகுப்புகளுக்கு அடுத்த ஆண்டு மொழி மாற்றம் செய்யப்பட்ட இந்த புத்தகங்களை அறிமுகம் செய்துவிட்டு அதற்கு அடுத்த ஆண்டில் இருந்து மற்ற வகுப்புகளுக்கு அறிமுகம் செய்ய அரசு முடிவு செய்து இருந்தது. ஆனால், இப்போது அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டு, 2018-2019ம் கல்வி ஆண்டில் 7, 8, 9, 10, பிளஸ் 1 வகுப்புகளுக்கு மட்டும் மொழி மாற்றம் செய்யப்பட்ட புத்தகங்களை வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதற்கு அடுத்த கல்வியாண்டில் மற்ற வகுப்புகளுக்கு வழங்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும், பிளஸ் 1 வகுப்பு படிக்கும் மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்களை பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களுடன் இணைக்க பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. அதற்காக அடுத்த ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுப் பொதுத் தேர்வு நடத்தலாம் என்றும், அந்த தேர்வு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு தேர்வுகள் போல நடத்தவும் ஆலோசித்து வருகின்றனர். அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வர உள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிட பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளி வளாகத்தில் பாடப் புத்தகம், நோட்டு, ஷூ, சீருடை விற்கக் கூடாது சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு திடீர் உத்தரவு

பள்ளி வளாகத்தில் பாடப் புத்தகம், நோட்டு, ஷூ, சீருடை விற்கக் கூடாது சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு திடீர் உத்தரவு | பொதுவாக, தனியார் பள்ளி களில் மாணவர்களுக்கு தேவை யான புத்தகங்கள், நோட்டுகள், பென்சில், பேனா, சீருடை, ஷூ போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படும். சிபிஎஸ்இ பள்ளி களிலும் இந்த வழக்கம் காணப்படு கிறது. இதுகுறித்து மாணவர்களின் பெற்றோரிடமிருந்து சிபிஎஸ்இ தலைமை அலுவலகத்துக்கு ஏராள மான புகார்கள் வந்தன. அதன் அடிப் படையில் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் தலைமை அலுவ லகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை யில் கூறப்பட்டு இருப்பதாவது: பள்ளி வளாகத்தில் பாடப் புத்தகங்கள், நோட்டுகள், எழுதுபொருட்கள், சீருடை, ஷூ, புத்தகப்பை போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதும் அவற்றை வாங்கச் சொல்லி பெற் றோரை நிர்ப்பந்திப்பதும், குறிப் பிட்ட பிராண்ட் பொருட்களை விற் பனை செய்வதும் ஆரோக்கியமான நடைமுறை அல்ல. இதுபோன்ற செயல்களில் சிபிஎஸ்இ பள்ளிகள் ஈடுபடக் கூடாது. பள்ளி என்பது கல்விப் பணி நடைபெறும் இடமே தவிர, வணிக மையம் அல்ல. மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்க வேண்டும் என்பதுதான் முதன்மை பணியாக இருக்க வேண்டும். இதுபற்றி சிபிஎஸ்இ விதிமுறைகளில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. எனவே, இனிமேல் பள்ளி வளாகத்தில் எந்த மாதிரியான வணிகமும் நடக்கக்கூடாது. மேலும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன் சில் (என்சிஇஆர்டி) வெளியிட் டுள்ள பாடப் புத்தகங்களை விடுத்து, தனியார் வெளியிட்டுள்ள புத்தகங்களை வாங்கச் சொல்லி பெற்றோர்கள் நிர்ப்பந்திக்கப்படு வதாகவும் சிபிஎஸ்இ அலுவலகத் துக்குப் புகார்கள் வரப்பெற் றுள்ளன. பள்ளிகளில் என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தனியார் பதிப்பகத்தினர் வெளியிடும் புத்தகங்களை உபயோகப்படுத்தக் கூடாது. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வெயில் கொளுத்துவதால் கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் கூடாது பள்ளிகளுக்கு இயக்குநர் உத்தரவு

வெயில் கொளுத்துவதால் கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் கூடாது பள்ளிகளுக்கு இயக்குநர் உத்தரவு | வெயில் கொளுத்துவதால், கோடை விடுமுறை நாட்களில் எக்காரணம் கொண்டும் சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தக் கூடாது என்று அனைத்து வகை பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய வானிலை ஆய்வு மையம் அதிக வெப்பக்காற்று உரு வாகியுள்ளதாக அறிவித்துள்ளது. வானிலை ஆராய்ச்சி மையத் தின் அறிவுறுத்தலையும், பெற் றோரின் வேண்டுகோளையும் கருத் தில்கொண்டு அனைத்து வகுப்பு களுக்கான தேர்வுகள் முன்கூட் டியே நடத்தப்பட்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளி கள், சிபிஎஸ்இ பள்ளிகள் மற்றும் இதர வாரிய பள்ளிகளுக்கும் ஏப்ரல் 21 (இன்று) முதல் கோடை விடு முறை விடப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவித்திருக்கிறார். எனவே, அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகளும் இது தொடர் பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாணவர்களின் நலன் கருதி எக்காரணம் கொண்டும் கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது என அனைத்து வகை பள்ளிகளுக்கும் அறிவுரை வழங்குமாறு முதன் மைக் கல்வி அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த சுற்றறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 20 April 2017

TEACHERS GENERAL TRANSFER COUNSELLING 2017 SCHEDULE AND NORMS DOWNLOAD | ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் விண்ணப்பங்களை ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் மே 5 ஆம் தேதி வரை வழங்கலாம்.

TEACHERS GENERAL TRANSFER COUNSELLING 2017 SCHEDULE AND NORMS DOWNLOAD | ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மே 19 முதல் 31 வரை நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. >> மாறுதல் விண்ணப்பங்களை ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் மே 5 ஆம் தேதி வரை வழங்கலாம். >> பதவி உயர்வு கலந்தாய்வு மற்றும் மாறுதல் கலந்தாய்வு மே 19 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை நடைபெறும். >> கலந்தாய்வு ONLINE மூலமாக நடைபெறும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE
Guestbook

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் கல்விச்சோலை இமெயில்களை பெற முடியும்.