அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா பதவிக்காலம் நீட்டிப்பு?

அண்ணா பல்கலை துணைவேந்தரின் பதவிக்காலம் ஏப்ரலில் முடிவடையும் நிலையில், அவரது பதவிக்காலத்தை நீட்டிப்பது குறித்து, உயர் கல்வித்துறை ஆலோசனை நடத்தியுள்ளது.

தமிழகத்தில், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு பல்கலையிலும், துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டால், அவர்கள் மூன்று ஆண்டுகள் பதவியில் நீடிப்பர்; பின், அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்படுவர். புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை, நிர்வாக பணிகளை அரசின் சார்பில் அமைக்கப்படும், ஒருங்கிணைப்பு குழு மேற்கொள்ளும். இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக, உயர் கல்வித்துறை செயலர் செயல்படுவார். பல்கலையின் சிண்டிகேட் மற்றும் செனட் சார்பில் ஒரு உறுப்பினர் நியமிக்கப்படுவார்.

No comments:

Post a Comment