ஆசிரியைக்கு கொரோனா பாதிப்பு பள்ளிக்கூடம் மூடப்பட்டது

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது, தொற்று பாதிப்பு குறைந்ததை அடுத்து 10 மாதங்களுக்கு பிறகு 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பயிலும் மாணவர்களுக்கு தற்போது வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் சேலத்தில் பிளஸ்-2 மாணவி மற்றும் ஆசிரியைக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது, திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இவரது கணவர் சில நாட்களுக்கு முன்பு வேலை தொடர்பாக வெளியூர் சென்று வந்தார். அப்போது அவருக்கு காய்ச்சல், சளி பாதிப்பு இருந்தது. அடுத்த சில நாட்களில் ஆசிரியை மற்றும் அவரது மகனுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. 

அதைத்தொடர்ந்து அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பிறகும் அந்த ஆசிரியை பள்ளிக்கூடத்திற்கு சென்று வந்தார். இந்தநிலையில்தான் அந்த ஆசிரியை மற்றும் அவரது கணவர், மகனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

ஆசிரியைக்கு கொரோனா பாதிப்பை தொடர்ந்து, அவர் பணிபுரியும் பள்ளிக்கூடத்தை சுகாதாரத்துறையினர் மூடினர்.

No comments:

Post a Comment