சேலத்தில் அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் உள்பட அனைவருக்கும் கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், நேற்று முன்தினம் சேலம் பெரிய கிருஷ்ணாபுரத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் படித்து வரும் பிளஸ்-2 மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த பள்ளி மற்றும் விடுதி ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டன. இந்தநிலையில், சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சக ஆசிரியைகள், மாணவிகள் அச்சம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்ட ஆசிரியை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

No comments:

Post a Comment