ஒரே நாளில் ரூ.536 அதிகரிப்பு: தங்கம் விலை மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது

சென்னையில் நேற்றுமுன்தினம் கிராம் ரூ.4 ஆயிரத்து 748-க்கும், பவுன் ரூ.37 ஆயிரத்து 984-க்கும் தங்கம் விற்பனை ஆனது. இந்தநிலையில் தங்கம் விலை நேற்று உயர்ந்தது. முந்தைய நாள் விலையை காட்டிலும் கிராமுக்கு ரூ.67 உயர்ந்து ரூ.4 ஆயிரத்து 815-க்கும், பவுனுக்கு ரூ.536 உயர்ந்து ரூ.38 ஆயிரத்து 520-க்கும் தங்கம் நேற்று விற்பனை ஆனது.

கடந்த நவம்பர் மாதம் 21-ந்தேதி ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 760-க்கும், பவுன் ரூ.38 ஆயிரத்து 80-க்கும் தங்கம் விற்பனை ஆகியிருந்தது. அதனைத்தொடர்ந்து குறையத் தொடங்கிய தங்கம் விலை, ஒரு மாதத்துக்கு பிறகு அதாவது கடந்த மாதம் 21-ந்தேதி மீண்டும் ரூ.38 ஆயிரத்தை எட்டியது.

தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் அதிகரித்தது. சென்னையில் நேற்றுமுன்தினம் ஒரு கிராம் ரூ.72-க்கும், கிலோ ரூ.72 ஆயிரத்துக்கும் வெள்ளி விற்பனை ஆனது. முந்தைய நாள் விலையை காட்டிலும் கிராமுக்கு 2 ரூபாய் 10 பைசா அதிகரித்து ரூ.74.10-க்கும், கிலோவுக்கு ரூ.2,100 அதிகரித்து ரூ.74 ஆயிரத்து 100-க்கும் வெள்ளி நேற்று விற்பனை ஆனது.

No comments:

Post a Comment