அனைத்து கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2GB டேட்டா இலவசம்: TN GOVT அதிரடி!!

ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள ஏதுவாக கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல் வரை தினமும் 2GB விலையில்லா டேட்டா கார்டுகள் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!!

கொரோனா வைரஸ் (CoronaVirus) காரணமாக கடந்த 9 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் (School) மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையில், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு (Online Class) மூலம் கல்வி கற்பித்து வருகின்றனர். இந்நிலையில், அரசு கல்லூரி மாணவர்களுக்கு 4 மாதங்களுக்கு (ஜனவரி முதல் ஏப்ரல் வரை) இலவச டேட்டா (Free Data) கார்டு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) உத்தரவிட்டுள்ளார். இதன்படி இணையவழி வகுப்புகளில் (Online Class) மாணவர்கள் கலந்துக்கொள்ள ஏதுவாக நாள் ஒன்றுக்கு 2GB டேட்டா இலவசமாக வழங்கப்பட உள்ளது. மேலும் அரசு கல்லூரிகள் (Govt College), கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 மாணவர்கள் இதன்மூலம் பயன்பெறுவர். 

இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (EPS) அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "மாண்புமிகு அம்மா அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் மாண்புமிகு Amma Govt எடுத்த பல்வேறு சீரிய நடவடிக்கைகளின் காரணமாக உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களின் சேர்க்கை விகிதம் தமிழ்நாட்டில் 32 சதவீதத்திலிருந்து 49 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மேலும், கல்லூரி மாணாக்கர்கள் சிறந்த கணினி திறன்களை பெற்றிட மாண்புமிகு AIADMK Govt, அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 

No comments:

Post a Comment