NEET 2021: இந்த ஆண்டு இரண்டு முறை நடக்குமா NEET தேர்வு? எதிர்பார்ப்பில் மாணவர்கள்

NEET 2021-ன் தேதிகள் தொடர்பான அறிவிப்பை டிசம்பர் மாத இறுதியில் அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் தேசிய தேர்வு முகைமை (NTA) வெளியிடும் என்ற செய்திகள் புழக்கத்தில் உள்ளன.

சமீபத்தில் கல்வி அமைச்சர் JEE Main 2021 தேர்வுகளுக்கான தேதிகளை அறிவித்தார்.

மாணவர்கள் NEET தேர்வை ஜூன் மாதம் வரை ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

வழக்கமாக NEET தேர்வுகள் குறித்த அறிவிப்பு நவம்பர் அல்லது டிசம்பரில் வெளியிடப்படும்

JEE Main 2021 தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வந்ததையடுத்து, தற்போது மாணவர்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான NEET 2021 பற்றிய தகவல்களுக்காக காத்திருக்கின்றனர். JEE Main 2021 தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னர், பல மாணவர்கள் ட்வீட் மூலம் NEET 2021 தேர்வு தேதிகள் பற்றிய அறிவிப்பையும் வெளியிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

NEET 2021-ன் தேதிகள் தொடர்பாக டிசம்பர் மாத இறுதியில் அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் தேசிய தேர்வு முகைமை (NTA) அறிவிக்கும் என்ற செய்திகளும் புழக்கத்தில் உள்ளன.

இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் எதுவும் வரவில்லை. மிகுந்த எதிர்பார்ப்புக்குப் பிறகு, கல்வி அமைச்சர் JEE Main 2021 தேர்வுகளுக்கான தேதிகளை அறிவித்தார். முன்னதாக அவர் மாணவர்களுடனான தனது வெபினாரில் பரிந்துரைத்தபடி, JEE Main 2021 நான்கு முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் NEET 2021 தேர்வும் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் நடக்கக்கூடுமோ என்ற எதிர்பார்ப்பு இப்போது வலுப்பெற்று வருகிறது.

கல்வி அமைச்சரை டேக் செய்து பல மாணவர்கள் NEET தேர்வை ஜூன் மாதம் வரை ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். சிலர் தேர்வை ஒன்றுக்கு மேற்பட்ட முறை நடத்தக் கோரியுள்ளனர். சிலரோ ஆன்லைனில் NEET தேர்வு (NEET Exam) நடக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

No comments:

Post a Comment