தபால் நிலையங்களில் கேட்பாரற்று இருக்கும் சேமிப்பு பணம் குறித்த விவரம் இணையதளத்தில் வெளியீடு தலைமை தபால் அதிகாரி தகவல்

சென்னை, தலைமை தபால் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் கேட்பாரற்று இருக்கும் சேமிப்பு பணத்தின் மேலாண்மை மற்றும் கையாளுதல் குறித்த விதிகளை (மூத்த குடிமக்கள் நலநிதி 2016) இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித செயல்பாடும் இல்லாத கணக்குகள் குறித்த விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும்.

இந்த விதியை பின்பற்றி, இத்தகைய கணக்குகள் பற்றிய விவரங்களை தனது www.indiapost.gov.in என்ற இணையதள முகவரியில் தபால் துறை வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு உள்ளூர் தபால் நிலையங்களை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 comment: