அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் தெரிவித்தார்.

இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

புயல் பாதிப்பு காலத்தில் தமிழக அரசு எடுத்த முன் னெச்சரிக்கை நடவடிக்கை களால், உயிர்ச் சேதமும், பொருள் சேதமும் தவிர்க்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் பல ஆண்டு களுக்கு முன்பு ஊரகப் பகுதி களில் கட்டப்பட்ட பள்ளி களில், மாணவர்களின் எண் ணிக்கைக்கு ஏற்ப கழிப்பிட வசதி இருந்தது. தற்போது மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கூடுத லாக கழிப்பறைகள் தேவைப் படுகிறது. இப்பள்ளிகளில் படிப்படியாக கூடுதல் கழிப் பறை வசதிகள் ஏற்படுத்தப் படும். தற்போது புதிதாக கட்டப்படும் அனைத்து பள்ளிகளி லும் தேவையான அளவு கழிப் பறை வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.

கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், அரை யாண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் விரும்பினால், ஆன் லைன் மூலம் அரையாண்டுத் தேர்வை நடத்திக் கொள்ள லாம். கரோனா ஊரடங்கால் பள்ளிகள் இயங்காத நிலை யில், 9-ம் வகுப்பு வரை 50 சத வீதம் பாடங்கள் குறைக்கப் பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவிகள் மற்ற மாநில மாணவர்களுடன் போட்டி போட வேண்டும் என்ற அடிப்படையில், இந்த வகுப்புகளுக்கு மட்டும் 35 சதவீதம் பாடங்கள் குறைக்கப் பட்டுள்ளன. முதல்வரை கலந்து ஆலோசித்து பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்த அறிக்கை வெளியிடப்படும்.

இரண்டாம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள், நோட்டுகள் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. பள்ளி கள் திறப்பு குறித்து கல்வி யாளர்கள், பெற்றோர், கல்வி ஒளிபரப்பை நடத்தி வரும் தொலைக்காட்சி உரிமையாளர் கள், மாணவர்கள் என அனை வரையும் கலந்துதான் முதல்வர் முடிவு எடுப்பார். பள்ளிகள் திறக் கப்படும்போது, சுகாதாரத் துறை என்னென்ன விதிகளை பின்பற்ற வேண்டுமென கூறி யுள்ளதோ, அவை அத்தனை யும் முறையாக அனைத்து பள்ளிகளிலும் கடைபிடிக் கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறி னார்.

No comments:

Post a Comment