ஜனவரி 4 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்.. அரசு அதிரடி!

புதுச்சேரியில் ஜனவரி 4 ஆம் தேதி தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவிருப்பதாக கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்திருக்கிறார்.

  • அனைத்து வகுப்புகளும் ஜன.4ஆம் தேதியிலிருந்து காலை 10 மணி முதல் 1 மணி வரை செயல்படும்
  • அரை நாள் மட்டும் செயல்படும் பள்ளிகளுக்கு விருப்பப்படும் மாணவர்கள் வரலாம்
  • ஜன.18 முதல் முழுமையாக பள்ளிகளை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது

புதுச்சேரியில் ஜனவரி 4 ஆம் தேதி தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவிருப்பதாக கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் (CoronaVirus) காரணமாக கடந்த 9 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் (School) மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையில், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு (Online Class) மூலம் கல்வி கற்பித்து வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரியில் ஜனவரி 4 ஆம் தேதி தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவிருப்பதாக கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தகவல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கமலக்கண்ணன் (Minister kamalakannan) கூறுகையில், “புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் அனைத்து வகுப்புகளும் ஜனவரி 4 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. ஜனவரி 4 ஆம் தேதியில் இருந்து காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வகுப்புகள் நடைபெறும். அரை நாள் மட்டுமே பள்ளிகள் செயல்படும். விருப்பப்படும் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். ஜனவரி 18 முதல் முழுமையாக பள்ளிகளை செயல்படுத்த (Schools Reopening) முடிவு செய்யப்பட்டுருக்கிறது” என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment