ஜனவரி 31-ந்தேதி கடைசிநாள் தொழிலாளர் நலநிதி செலுத்த புதிய இணையதளம் வாரிய செயலாளர் அறிவிப்பு

தொழிலாளர் நலவாரிய செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொழிலாளர் நலநிதி சட்டத்தின்படி தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத்தோட்ட நிறுவனங்கள், 5 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள், உணவு நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளிக்கும், தொழிலாளியின் பங்காக ரூ.10-ம், வேலை அளிப்பவர் பங்காக ரூ.20-ம் சேர்த்து மொத்தம் ரூ.30 வீதம் தொழிலாளர் நலநிதி பங்குத்தொகையாக நிர்வாகம் செலுத்த வேண்டும். அதன்படி 2020-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நலநிதியை ஜனவரி 31-ந்தேதிக்குள் வாரியத்துக்கு செலுத்த வேண்டும்.

இந்த நிதியை இணையவழியில் நிறுவனங்கள் செலுத்துவதற்கு www.lwb.tn.gov.in எனும் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ‘ The Secretary, Tamil Nadu Labour Welfare Board, Chennai -600006’ எனும் பெயருக்கு வங்கி வரைவோலையாக, அடுத்த மாதம் (ஜனவரி) 31-ந்தேதிக்கு முன்பாக செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், டி.எம்.எஸ். வளாகம், தேனாம்பேட்டை, சென்னை-600 006’, எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment