இன்று முதல் 24 மணி நேரமும் ஆர்டிஜிஎஸ் பண பரிவர்த்தனை

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நேற்று கூறியதாவது:

நிகழ்நேர மொத்த பரிவர்த்தனை எனப்படும் ஆர்டிஜிஎஸ் உலகின் சில நாடுகளில் மட்டுமே எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படுகிறது. தற்போது அந்தப் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. இதை சாத்தியப்படுத்திய ரிசர்வ் வங்கி குழுவுக்கும் நிதிசார் தொழில்நுட்பம் மற்றும் இணை சேவை நிறுவனத்துக்கும் பிற சேவை கூட்டாளிகளுக்கும் வாழ்த்துகள். இவ்வாறு சக்தி காந்த தாஸ் கூறினார்.

வங்கிப் பரிவர்த்தனைகளில் பரவலாக ஐஎம்பிஎஸ், நெஃப்ட் மற்றும் ஆர்டிஜிஎஸ் ஆகிய பண பரிவர்த்தனை முறைகள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றில் அதிக மதிப்பிலான பரிவர்த்தனைகள் ஆர்டிஜிஎஸ் மூலம் செயல்படுத்தப்படும். நெஃப்ட் முறையில் ரூ.2 லட்சம் வரை பரிவர்த்தனை செய்யலாம். அதற்குமேல் பரிவர்த்தனை செய்ய ஆர்டிஜிஎஸ் முறையை பயன்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment