கால்நடை மருத்துவ படிப்புக்கு டிச.23-ல் கலந்தாய்வு தொடக்கம்

கால்நடை மருத்துவப் படிப்பு களுக்கு கலந்தாய்வு வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை , நாமக்கல், - திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன. 

இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) மற்றும் நான்கு ஆண்டுகள் கொண்ட உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்), பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி. டெக்), கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்) உள்ளன. கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளுக்கு 360 இடங்களில் அகில இந்திய ஒதுக் கீட்டுக்கு 54 இடங்கள் (15 சதவீதம்) போக எஞ்சியுள்ள 306 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. 

பி.டெக் படிப்புகளுக்கு மொத்தம் 100 இடங் கள் இருக்கிறது. இதில் உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 40 இடங் களில் 6 இடங்கள் (15 சதவீதம்) இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு புதிதாக சேலம் தலைவாசல், தேனி வீரபாண்டி, உடுமலைப்பேட்டையில் தலா 40 இடங்களுடன்3கல்லூரிகள் செயல் பட தொடங்குகின்றன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாண வர் சேர்க்கைநடக்கிறது. 

தரவரிசை பட்டியல் கடந்த 19-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், இந்த படிப்பு களுக்கு சிறப்பு பிரிவினருக்கான (மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள்) கலந் தாய்வு மட்டும் வரும் 23-ம் தேதி சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடக்கிறது. 

பொதுப் பிரிவு, இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழகத்தின் இணையதளங்களில் ஆன்லை னில் நடக்க உள்ளது.

No comments:

Post a Comment