2021 டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு

2021-ம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 

குரூப் 2 மற்றும் குரூப் 2A, தேர்வுக்கான அறிவிக்கை மே மாதமும், குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ. தேர்வுக்கான அறிவிக்கை செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.ஆண் டுக்கான தற்காலிக தேர்வுக் கால அட்டவணையை தமிழ்நாடு அர சுப் பணியாளர் (டிஎன்பிஎஸ்சி) தேர்வாணையம் புதன்கிழமை வெளியிட்டது. 

இதுகுறித்து, டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட பட்டியலில் தெரி விக்கப்பட்டுள்ளதாவது: குரூப் 1 தேர்வு ஜனவரி 3-ஆம் தேதியும், தொழில், வணிகத் துறை உதவி இயக்குநர் காலிப் பணியிடத்துக்கான தேர்வு ஜன வரி 9-ஆம் தேதியும் நடைபெ றவுள்ளன. தோட்டக்கலைத் துறை இயக்குநர், வேளாண் மைத் துறை உதவி அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை ஜனவரியி லும், பொதுப்பணித் துறை உதவி வரைவாளர் பணியிடத் துக்கு தேர்வு அறிவிக்கை பிப்ரவ ரியிலும், கால்நடை உதவி மருத் துவர், மீன்வளத் துறை உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை மார்ச்சிலும், ஒருங்கிணைந்த பொறியியல், புள்ளியியல் துறைகளுக்கான தேர்வு அறிவிக்கை ஏப்ரலிலும் வெளியிடப்படும். 

குரூப் 2 தேர்வுக்கான அறி விக்கை அடுத்த ஆண்டு மே மா தமும், கிராம நிர்வாக அலுவலர் பணியிடம் அடங்கிய குரூப்4தேர் வுக்கான அறிவிக்கை செப்டம்ப ரிலும் வெளியாகின்றன. இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் காலிப் பணியிடங்க ளுக்கான எழுத்துத் தேர்வு அறி விக்கை ஜூலையிலும், சட்டப் பேரவைநிருபர் பணியிடங்களுக் கானதேர்வு அறிவிக்கை அக்டோ பரிலும், மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களுக்கு நவம்பரிலும், தொழிலாளர் நலத் துறை உதவி ஆணையர் காலிப் பணியிடத் துக்கு டிசம்பரிலும் அறிவிக்கை வெளியிடப்படும்.

No comments:

Post a Comment