பள்ளி திறப்பு எப்போது? முதல்வர் இன்று முடிவு!

தமிழகத்தில், வரும் 16ம் தேதி பள்ளிகளை திறக்கலாமா, வேண் டாமா என்பது குறித்து, முதல்வர் இன்று மூடிவை அறிவிப்பார் என, எதிர்பார்க்கப் படுகிறது. கொரோனா பிரச்னை யால், ஏழு மாதங்களாக பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டு உள்ளன. 

வரும், 15ம் தேதி முதல் பள்ளி, கல்லுாரிகளை திறக்க, அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதும், பெற் றோரின் கருத்துக்களை கேட்ட பின், பள்ளி களை திறக்க முடிவு செய்யப்பட்டது. - அதன்படி, கருத்து கேட்பு கூட்டம், தமிழ கம் முழுதும், 9ம் தேதி நடந்தது. பெற்றோரின் கருத்துகள், மாவட்ட வாரியாக தொகுக்கப் பட்டு, தமிழக அரசிடம் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த அறிக்கையை, தலைமைச் செயலர், பள்ளிக் கல்வி, உயர் கல்வி மற்றும் சுகாதாரத் துறைச் செயலர்கள் அடங்கிய குழு பரிச் லனை செய்து, தன் பரிந்துரையை, அரசுக்கு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், வரும், 15ம் தேதி, பள்ளிகளை திறப்பதா, வேண்டாமா என் பதை, முதல்வர் இன்று அறிவிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

பள்ளிகளை திறக்க, 40 சதவீதத்துக்கு மேற்பட்ட பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ள தாக தெரிகிறது. - சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை யும், பள்ளி திறப்பை தள்ளி வைக்குமாறு, அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. எனவே, பள்ளி திறப்பு, டிசம்பர் மாதத் திற்கு தள்ளிப் போகுமா அல்லது தீபாவளிக்கு பின் திறக்கப்படுமா என, இன்று அறிவிப்பு வெளி யாக வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment