ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப உத்தரவு சிவில் இன்ஜினீயரிங் டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாகவுள்ள பணிபார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்ப அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் கே.எஸ்.பழனிசாமி, சென்னை தவிர மற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்ப தாவது: | * ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாகவுள்ள பணி பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்ப பணியாளர் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 

எனவே, தங்கள் மாவட்டத்தில் இப்பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சிவில் இன்ஜினீயரிங்கில் டிப்ளமோ (டிசிஇ) முடித்திருக்க வேண்டும். அப்படிப்பை முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ படித்திருக்கலாம். ஜூலை 1 நிலவரப்படி 35 வயதுக்குள் இருக்க வேண்டும். 

'ஒரு காலியிடத்துக்கு 5 பேர்' என்ற விகிதாச்சார அடிப்படையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இடஒதுக்கீடு அடிப்படையில் தகுதியான நபர்களின் பட்டியல் பெறப்படவேண்டும். 

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தலைமையில் நியமனக் குழு அமைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர்களின் தொழில்நுட்ப அறிவை சோதிக்கும் வகையில் 100 மதிப்பெண்களுக்கு கொள்குறிவகை போட்டித் தேர்வு நடத்தப்பட்டு அந்த மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்களை தேர்வுசெய்து, அப்பட்டியலை மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். 

பணிநியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நேரடி நியமன முறையில் தமிழகம் முழுவதும் மொத்தம் 777 காலியிடங்கள் நிரப் பப்பட உள்ளன. அதிகபட்சமாக திருவண்ணா மலை மாவட்டத்தில் 80 காலியிடங்களும், சேலம் மாவட்டத்தில் 53 காலியிடங்களும் உள்ளன.

No comments:

Post a Comment