உள்ஒதுக்கீடு மூலம் இடம்பெற்ற அரசு பள்ளி மாணவர்களை ‘ஸ்டெதஸ்கோப்’ அணிவித்து அழகுபார்த்த எடப்பாடி பழனிசாமி

அரசு பள்ளிகளில் படித்து மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அடிப்படையில் இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சேர்க்கை ஆணையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

அதனுடன் சேர்த்து மருத்துவப்படிப்பில் இடம்பெற்ற மாணவ-மாணவிகளுக்கு வெள்ளை நிற அங்கி, ஸ்டெதஸ்கோப், உடற்கூறியியல் உபகரணங்கள் அடங்கிய பெட்டகத்தையும் வழங்கினார். அப்போது மேடையிலேயே ஒரு மாணவியை வெள்ளை நிற அங்கி, ஸ்டெதஸ்கோப் அணிய சொன்னார். அந்த மாணவியும் கண்ணீருடன் அணிந்துகொண்டு முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்தார்.

இதேபோல் மாணவர் சேர்க்கை ஆணை பெற்ற மாணவ-மாணவிகளையும் வெள்ளை நிற அங்கி, ஸ்டெதஸ்கோப் அணிந்துகொண்டனர். அதன்பின்னர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது மாணவ-மாணவிகள் ‘7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி’ என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பலூன் களை பறக்கவிட்டனர்.

No comments:

Post a Comment