தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் முடிவு

உண்ணாவிரத அறப்போராட்டம் தூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலகத்தில் நவம்பர் 3வது வாரம் முதுகலை ஆசிரியர்கள் ஊதியம் வழங்க கோரி உண்ணாவிரத அறப்போராட்டம் 
2019 ஜனவரியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் இரண்டு முதுகலை ஆசிரியர்கள் மீது உள்ள 17 (ஆ) நடவடிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தியும், மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் 2018ம் ஆண்டு முதல் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் புதிய பணியிடங்களில் பணியேற்ற (ஓய்வு பெற்றவர்களின் பணியிடங்கள் சுமார் 50 முதுகலை ஆசிரியர்களுக்கு பணிநியமனம் ஒப்புதல் தமிழக அரசு வழங்காததால் , ஊதியம் இல்லாமல் பணிபுரிந்து வருகிறார்கள். 

இவர்களுக்கு விரைவில் ஊதியம் வழங்கிடவும் நவம்பர் மூன்றாவது வாரம் தூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்திட மாவட்ட செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்து உள்ளது. பாதிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்கள் கடந்த இரு ஆண்டுகளாக ஊதியம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பணிபுரிந்து வந்தனர். தமிழக அரசு ஊதியம் வழங்க காலம் தாழ்த்தி வருவதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தங்களுடைய குழந்தைகளை மேற்படிப்புக்கு சேர்க்க இயலாமலும் இருப்பதால் அனைவரும் குடும்பத்தினருடன் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழலில் உள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி அலாசியஸ் மேல்நிலைப்பள்ளி, மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் மேல்நிலைப்பள்ளி, மெஞ்ஞானபுரம் எலியட் டக்ஸ்போர்டு மேல்நிலைப்பள்ளி, மூக்குப்பேறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி , சாத்தான்குளம் புலமாடன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி , சாத்தான்குளம் புனித வளன் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி, நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளி, வெள்ளாளன்விளை பிஷப் அசாரியா மேல்நிலைப்பள்ளி, நாசரேத் மர்காஷியஸ் மேல்நிலைப்பள்ளி, சாயர்புரம் தூயமேரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப்பள்ளி, உடன்குடி ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி, உடன்குடி கிறிஸ்டியா நகரம் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 முதல் பணியேற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு ஊதியம் தமிழக அரசால் ஊதியம் வழங்கவில்லை . 

புதிய பணியிடத்தில் சேரும் முதுகலை ஆசிரியர்களுக்கு 2018ம் ஆண்டிற்கு முன் பணியேற்ற 6 மாதத்திற்குள் பணி நியமனம் ஒப்புதல் வழங்கப்பட்டு ஊதியமும் கல்வித்துறையால் வழங்கப்பட்டு வந்தது. இந்த உண்ணாவிரத அறப்போராட்டத்தில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம்,, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் கழகம், மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள். .

No comments:

Post a Comment