தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு நடைபெற்றது.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25% இடங்களில் இலவசமாக ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவர். இந்த திட்டத்தில் மழலையர் அல்லதுஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்தாமல் 8-ம் வகுப்பு வரை இலவசமாகப் படிக்கலாம்.

அதன்படி மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் 1.15 லட்சம்இடங்கள் உள்ளன. இதற்கான முதல்கட்ட மாணவர் சேர்க்கைக்கு86,326 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதில் 60 ஆயிரம் பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து எஞ்சிய இடங்களை நிரப்புவதற்கு 2-ம்கட்ட மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் 16,500 பேர் விண்ணப்பித்தனர்.

இதையடுத்து தேர்வான மாணவர்களின் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. தொடர்ந்து அதிக விண்ணப்பங்கள் வந்துள்ள பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர் தேர்வு நேற்று நடைப்பெற்றது.

அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற குலுக்கல் தேர்வில்பெற்றோர் கலந்து கொண்டனர். இதையடுத்து இலவச சேர்க்கைக்கு தேர்வான மாணவர்களின் விவரம் அந்தந்த பள்ளிகளின் தகவல் பலகையில் ஒட்டப்படும்.

மேலும், பள்ளிக்கல்வியின் (https://rte.tnschools.gov.in) இணையதளத்திலும் சேர்க்கை பெற்ற மாணவர்களின் பட்டியல் வெளியிடப்படும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment