கலந்தாய்வின்போது கொரோனா பாதித்து இருந்தால் நிலை என்ன?

மருத்துவ படிப்பு கலந்தாய்வில் பங்குபெறும் மாணவர்கள், பெற்றோரின் உடலை தெர்மல்ஸ்கேனர் கருவி மூலம் சோதிக்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கலந்தாய்வின்போது, ‘எதிர்பாராத, தவிர்க்கமுடியாத சூழ்நிலைகள் காரணமாக (கொரோனாவால் பாதிக்கப்படுவது உள்பட) தரவரிசையில் இடம்பெற்ற மாணவ-மாணவிகள் கலந்து கொள்ள முடியாமல் போனால், அடுத்த தேதியில் கலந்தாய்வில் பங்குபெற அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் அந்த நேரத்தின் கலந்தாய்வின்போது இருக்கும் இடங்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும். மாறாக தரவரிசை பட்டியல் அடிப்படையில் இடங்களை கேட்க முடியாது’ என்று மருத்துவ மாணவர் சேர்க்கை அலுவலகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment