829 ஆசிரியர்கள் 575 மாணவருக்கு கரோனா தொற்று.

ஆந்திராவில் கடந்த 2-ம் தேதி 9, 10 மற்றும் இண்டர்மீடியட் (பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2) ஆகிய வகுப்புகள் இயங்க தொடங்கின. 

பள்ளி, கல்லூரிகள் தொடங் கியது முதலே கரோனா பரவ தொடங்கியது. இதனால் 8-ம் தேதிக்குள் ஆசிரியர்கள் அனை வருக்கும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டுமென உத்தர விடப்பட்டது. 

இதன்படி பரி சோதனை செய்ததில், 829 பேருக்குகரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல 575 மாணவர்களுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் கரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை ஆன்லைன்வகுப்புகளை தொடர வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment