'நீட்' தேர்வுக்கு இலவச பயிற்சி சென்னையில் நவ.8-ல் அறிமுக வகுப்பு

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு சென்னையில் இலவச மாக ஆன்லைனில் பயிற்சி அளிக் கப்படுகிறது. இதுதொடர்பாக பி.டி. செங்கல்வராயர் சிறப்பு பள்ளியின் கவுரவ இயக்குநரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான எஸ். எஸ்.ஜவஹர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

பி.டி.செங்கல்வராயர் சிறப்பு பள்ளி சார்பில் 2021 'நீட்' தேர்வுக்கு இணையவழியிலான இலவச பயிற்சி வகுப்புகள் நவ.15 முதல் அடுத்த ஆண்டு ஏப்.30 வரை நடைபெற உள்ளன. வகுப்புகள் ஒருநாள் விட்டு ஒருநாள் கூகுள் மீட் வழியாக நடைபெறும். இதற்கான அறிமுக வகுப்பு இணையவழி வாயிலாக நவ.8-ம் தேதி (ஞாயிறு) காலை 11 மணிக்கு நடத்தப்படுகிறது. 

விருப்பமுள்ள மாணவர்கள் https://meet.google.com/phy-xjxyqua என்ற கூகுள் மீட் லிங்க்கை பயன்படுத்தி பங்கேற்கலாம். முன்ன தாக அவர்கள் 8668038347 என்ற செல்போன் எண்ணில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment