மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு: அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே சலுகை எடப்பாடி பழனிசாமி தகவல்

தமிழக முதல்-அமைச் சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நீலகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

ஊட்டியில் உள்ள தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் கொரோனா பரவல் தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.

பின்னர் முதல்-அமைச்சரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து கூறியதாவது:-

பள்ளி, கல்லூரிகள்

கேள்வி:- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது?

பதில்:- பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் மற்றும் பெற்றோரிடம் இருந்து பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வந்தது. அதன்படி, பாதுகாப்பு வழிமுறைகளுடன் வருகிற 16-ந் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு கருத்துகள் வந்ததால் வருகிற 9-ந் தேதி காலை 10 மணிக்கு அனைத்து பள்ளிகளிலும் பெற்றோரிடமிருந்து கருத்து கேட்கப்படுகிறது. அதன் பின்னர் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே உள் ஒதுக்கீடு

கேள்வி:- அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படுமா?

பதில்:- அரசு உதவி பெறும் பள்ளிகளும் தனியார் பள்ளிகள் தான். மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அரசு பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மட்டும் வழங்கப்படும். அவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

No comments:

Post a Comment