பள்ளி மாணவியை தாக்கிய தலைமை ஆசிரியைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் மனித உரிமை ஆணையம் உத்தரவு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகா புளியரனன்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 30 மாணவர்கள் படித்து வருகிறார்கள். 5-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்துவது வழக்கம். கடந்த ஆண்டு 5-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் தன்னுடன் படித்து வரும் சக மாணவிகளுடன் சேர்ந்து பள்ளி வளாகத்தை சுத்தம் செய்த நிலையில் பள்ளி வளாக சாவியை தொலைத்து விட்டார்.

இதை அறிந்த தலைமை ஆசிரியை தேவி, அந்த மாணவியை கடுமையாக திட்டி அடித்து உள்ளார். இதில் வலி தாங்காமல் மாணவி கீழே விழுந்தார். உடனடியாக கிராமத்தினர் அவரை மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்த விவகாரத்தை மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர்(பொறுப்பு) நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தார்.

முடிவில், ‘சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது தலைமை ஆசிரியை தேவி மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தெரிகிறது. இதற்காக, பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தைக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். இந்த தொகையை தலைமை ஆசிரியையிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம். மேலும், தலைமை ஆசிரியை மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment