நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவது குறித்து பொது நூலக இயக்ககம் அறிவிப்பு டிச.11-க்குள் விண்ணப்பிக்கலாம்

நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவது குறித்து பொது நூலக இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பதிப்பாளர்கள் மற்றும் நூல் விற்பனையாளர்கள் டிச.11-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பொது நூலகஇயக்குநர் (கூடுதல் பொறுப்பு) எஸ்.நாகராஜ முருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொது நூலக இயக்ககத்தின் கீழ் இயங்கும் நூலகங்களுக்கு 2018 மற்றும் 2019-ம் ஆண்டில் பதிப்பான தமிழ், ஆங்கில நூல்கள் வாங்க பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் இருந்து நூல்கள் பரிசீலனைக்கு வரவேற்கப்படுகின்றன. அரசால் அமைக்கப்படும் நூல் தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் நூல்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். கடந்த 2018, 2019-ம் ஆண்டுகளில் பதிப்புசெய்யப்பட்ட தமிழ், ஆங்கில நூல்களை அனுப்பலாம்.

நூல்களின் பிரதிகள் மற்றும் ஏ,பி,சி படிவங்களுடன் (குறுந்தகடு) டிச.11-ம் தேதிக்குள், பொது நூலக இயக்ககம், 737/1, அண்ணா சாலை, சென்னை - 2என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். நூல் பதிவு கட்டண விவரம்,நூல்கள் சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகள், நிபந்தனைகள் www.connemarapubliclibrarychennai.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

கடந்த 2018, 2019-ம் ஆண்டுகளில் பதிப்புசெய்யப்பட்ட தமிழ், ஆங்கில நூல்களை அனுப்பலாம்.

No comments:

Post a Comment