பெற்றோர், ஆசிரியர் கருத்துகளைக் கேட்டு பள்ளிகள் திறப்பு குறித்து 11-ம் தேதி முடிவு அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

பெற்றோர், ஆசிரியர்களின் கருத் துக்களின் அடிப்படையில் வரும் 11-ம்தேதிபள்ளிகள் திறப்பு குறித்த முடிவு அறிவிக்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தெரிவித்தார். 

ஈரோடு மாவட்டம் பவானியில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பள்ளிகள் திறப்பு குறித்து வரும் ஒம்தேதி ஆசிரியர்கள், பெற்றோர்க ளிடம் கருத்து கேட்கப்படும். அவர்கள் தெரிவிக்கும் கருத்துகள், ஆலோசனைகளின் அடிப்படை யில், பள்ளிகள் திறப்பு குறித்து வரும் 11-ம் தேதி முடிவு அறிவிக்கப்படும். 

கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்குப்பிறகு, தனியார் பள்ளி கள் கட்டிட அனுமதி பெறவேண் டும் என்ற விதிமுறை உருவாக்கப் பட்டது. கட்டிட அனுமதி பெறாத வர்களுக்கு ஓராண்டுதான் அங்கீகா ரம் வழங்க வேண்டுமென்றாலும், முதல்வரின் ஒப்புதலுடன் இரண்டாண்டுகள் அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் வெளிப்படைத் தன்மையுடன் இதுவரை 2,512 தனி யார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment