விஜயதசமியன்று அங்கன்வாடி மையங்களில் மாணவர் சேர்க்கை

விஜயதசமியன்று அங்கன்வாடி மையங்களில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை அதிகாரி கூறியதாவது: 

அங்கன்வாடி மையங்களில் நடப்பு ஆண்டில் குழந்தைகள் ஆர்வமுடன் புதிதாக சேர்ந்துள்ளனர். இந்நிலையில், விஜயதசமி தினத்தில் 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள பெற்றோரைத் தொடர்பு கொண்டு புதிதாக மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று அங்கன்வாடி பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஆர்வமுள்ள பெற்றோரும் அங்கன்வாடி பணியாளர்களை அணுகினால் உடனடியாக மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment