நீட் தேர்வு அமலுக்குப் பின் தமிழ்வழி மாணவர் சேர்க்கை சரிவு

மருத்துவக்கல்வி இயக்குநரகம் தகவல் நீட் தேர்வு அமலுக்குபின் மருத்து வப்படிப்புகளில் தமிழ்வழிமாண வர் சேர்க்கை சரிந்துள்ளதாக மருத்துவக்கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படு கிறது. 

தமிழகத்தில் 2017-ம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடத்தப் படுகிறது. தகவலறியும் உரிமைச் சட்டம் இந்நிலையில், நீட் தேர்வுக்கு பின்மருத்துவக்கல்வியில் சேரும் தமிழ்வழி படித்த மாணவர்கள் எண்ணிக்கை சரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி 2015 முதல் 2018-ம் ஆண்டு வரை தமிழ்வழியில் பள்ளிப்படிப்பை முடித்த மாண வர்கள் எத்தனை பேர் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என்று தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் அப்பாவு ரத்தினம் கேள்வி எழுப்பினார். 

அதற்கு மருத்துவக்கல்வி இயக்குநரகம் அளித்த பதிலில், 2015 முதல் 2018-ம் ஆண்டு வரை தமிழ்வழியில் படித்த 1,205 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அதில் நீட் தேர்வுக்கு முந்தைய 2015, 2016-ம் ஆண்டுகளில் 1,047 பேரும், நீட் அமலான பின் 2017, 2018-ம் ஆண்டுகளில் 158 பேரும் தமிழ்வழியில் பள்ளிப்படிப்பை முடித்து மருத்துவப் படிப்புகளில் சேர்ந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment