கல்வி தொலைக்காட்சி பார்த்தால் தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும் பள்ளிக்கல்வித் துறை தகவல்

பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு கல்வி தொலைக் காட்சியில் நடத்தப்படும் பாடங் களில் இருந்தே அதிக கேள்விகள் இடம்பெறும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நடப்பு ஆண்டு கரோனா பரவ லால் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கல்வி தொலைக்காட்சி மற்றும் இணையதளம் வழியில் மாணவர் களுக்கு பாடங்கள் நடத்தப்படு கின்றன. 

எனினும், மாணவர்களி டம் பொதுத்தேர்வு குறித்த அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் கல்வி தொலைக் காட்சியில் நடத்தப்படும் பாடங் களில் இருந்தே பொதுத்தேர்வில் அதிககேள்விகள் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறியதாவது: அரசுப்பள்ளி மாணவர்கள் நலன்கருதிகல்வி தொலைக்காட்சி யில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து பொதுத்தேர்வில் அதிக அளவிலான கேள்விகள் கேட்கப்பட உள்ளன. 

எனவே, பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைத்து பாடங்களையும் படிக்காமல் கல்வி தொலைக்காட்சியில் நடத்தப்படும் பகுதிகளை மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி நன்றாக படித்தால் போதும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment